×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொடூர பாட்டி.... ஐயோ... சுடுது தாங்க முடியல்லை! கொளுத்தும் வெயிலில் 5 வயது பேத்தியை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு பெண் காவலர் செய்த கொடூரம்..!!

பஞ்சாபில் 5 வயது பேத்தியை கொடூரமாக தண்டித்த பெண் ASI மீது வழக்கு பதிவு. அக்கம் பக்கத்தினர் மீட்டு காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

Advertisement

பஞ்சாப் மாநிலம் பரீத்கோட்டில், 5 வயது சிறுமியை கொடூரமாக தண்டித்த பெண் உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டின் வெளியே இரும்புக் கேட்டில் தலைகீழாக கட்டி தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கம் பக்கத்தினர் தலையிட்டு குழந்தையை மீட்டுள்ளனர்.

வெயிலில் தலைகீழாக கட்டப்பட்ட சிறுமி

தகவலின்படி, பெண் ASIயாக பணியாற்றும் பாட்டி, தனது பேத்தியை தண்டிப்பதற்காக கை, கால்களைத் துணியால் கட்டி வீட்டின் வெளியே உள்ள இரும்புக் கேட்டில் தலைகீழாக தொங்கவிட்டுள்ளார். அப்போது பகலில் கடும் வெயில் நிலவியதாக கூறப்படுகிறது. பெற்றோர் வெளிநாட்டில் வசித்து வருவதால், குழந்தை அவரின் பராமரிப்பிலேயே இருந்தது.

அக்கம் பக்கத்தினர் தலையீடு

வெயிலின் தாக்கத்தால் தாங்க முடியாமல் சிறுமி கதறி அழுததை கேட்ட அண்டை வீட்டார் உடனே வந்து பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் விரைந்து செயல்பட்டு, கேட்டில் கட்டப்பட்டிருந்த குழந்தையை அவிழ்த்து கீழிறக்கினர். பின்னர் சிறுமிக்கு முதற்கட்ட உதவியும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: சாக்லேட் தரேன் கடைக்குள் வா பாப்பா.... 7 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து....இறைச்சிக் கடையில் 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை! அதிர்ச்சி வீடியோ!!!

வழக்கு பதிவு, விசாரணை தீவிரம்

பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவரே இவ்வாறு நடந்து கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் முழு விவரங்களையும் அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.

 

இதையும் படிங்க: இளைஞரை மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு.... உடலில் மிளகாய்ப் பொடி பூசிய கொடூரம்! தந்தை கெஞ்சியும் விடல... பழைய பகையை தீர்க்க இப்படியொரு தண்டனையா? பகீர் சம்பவம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Punjab child abuse #ASI case India #குழந்தை துஷ்பிரயோகம் #police brutality #india news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story