சாக்லேட் தரேன் கடைக்குள் வா பாப்பா.... 7 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து....இறைச்சிக் கடையில் 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை! அதிர்ச்சி வீடியோ!!!
ஒடிசா பாராதீப் பகுதியில் 7 வயது சிறுமியை 3 நாட்கள் சிறை வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது. போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு.
ஒடிசா மாநிலத்தின் பாராதீப் பகுதியில் நடந்துள்ள கொடூரச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 வயது சிறுமி ஒருவரை மூன்று நாட்கள் சிறை வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக 24 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் சமூகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது.
சாக்லேட் ஆசை காட்டி கடைக்குள் அழைத்துச் சென்ற இளைஞர்
அந்தப் பகுதியைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட இளைஞர், இறைச்சிக் கடை நடத்தி வந்தவர் என கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி, சிறுமிக்கு சாக்லேட் தருவதாக கூறி தனது கடையின் உள்ளறைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை வழங்கியதாகவும், அதனால் மயக்கமடைந்த நிலையில் சிறுமியை மூன்று நாட்கள் அடைத்து வைத்திருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மூன்று நாட்கள் தொடர்ந்த கொடுமை
சிறுமி சத்தம் போடாமல் இருக்க தொடர்ந்து மயக்க மருந்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மனிதத்தன்மையற்ற செயல் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தி மற்றும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்கள் கழித்து எப்படியோ தப்பித்து வெளியேறிய சிறுமி தனது தோழியிடம் நடந்ததை பகிர்ந்துள்ளார்.
பொதுமக்கள் ஆவேசம் – குற்றவாளி மீது தாக்குதல்
சம்பவம் தெரிந்ததும் ஊர் பெண்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரின் கடையைச் சூழ்ந்தனர். அவரை வெளியே இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு கைது செய்தனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் கைது
காவல்துறை, குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் மீது போக்சோ சட்டம் (POCSO) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மனநல ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சமூகமும் அதிகாரிகளும் மேலும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் வலியுறுத்துகிறது.