×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலிக்க மறுத்த நர்ஸ்ஸை வெட்டி கொலை செய்த ரவுடி... தண்டவாளத்தில் பிணமாக மீட்பு..! நண்பர் கைது.... பகீர் சம்பவம்..!!!

புதுச்சேரியில் நர்ஸ் ஜெயஸ்ரீ கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி கலைக்குமார், காட்பாடி அருகே ரெயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். நண்பர் கைது

Advertisement

புதுச்சேரியில் நர்ஸ் ஜெயஸ்ரீ கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி கலைக்குமார், காட்பாடி அருகே ரெயில் தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதற்கிடையே, ஜெயஸ்ரீயை சந்திக்க பைக் மற்றும் செல்போன் கொடுத்து உதவியதாக கூறப்படும் கலைக்குமாரின் நண்பர் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார். கலைக்குமார் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காதலை மறுத்த நர்ஸ்; ஆத்திரத்தில் கொலை

புதுச்சேரி வில்லியனூர் கோபாலன் கடை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடியின் மகள் ஜெயஸ்ரீ (22). தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி கலைக்குமாரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கலைக்குமார் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்ததால், அவர் சிறைக்கு சென்று வந்துள்ளார்.

இதையும் படிங்க: ரோட்டில் திடீரென நின்ற பைக்..! பின்னாடி வந்த கிரேனில் நசுங்கி நொடிப்பொழுத்தில் பலியான 39 வயது நபர்! விபத்தா? வேறு காரணமா? குலை நடுங்கவைக்கும் CCTV காட்சி..!!,

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் கலைக்குமாரிடம் பேசுவதையும், அவரை சந்திப்பதையும் ஜெயஸ்ரீ தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஜெயஸ்ரீயின் நடவடிக்கைகளை கலைக்குமார் கண்காணித்ததாகவும், அவர் வேறு ஒருவருடன் பழகி வந்ததை அறிந்ததும் ஆத்திரமடைந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தனது நண்பர்கள் இருவரின் உதவியுடன் ஜெயஸ்ரீயை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

நண்பர்கள் கைது; செல்போன், பைக் கொடுத்தது அம்பலம்

ஜெயஸ்ரீ கொலை தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக கலைக்குமாரின் நண்பர் லோகேஷ் கைது செய்யப்பட்டார். தலைமறைவான கலைக்குமார் மற்றும் கார்த்திக்கை போலீசார் தேடி வந்த நிலையில், கார்த்திக் திருப்பதியில் பிடிபட்டார்.

விசாரணையில், ஜெயஸ்ரீயுடன் பேசுவதற்காக கலைக்குமாருக்கு செல்போன் வழங்கியதும், அவரை சந்திக்கச் செல்வதற்காக தனது பைக்கை கொடுத்து உதவியதும் கார்த்திக்கிடம் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காட்பாடி தண்டவாளத்தில் சடலமாக மீட்பு

இதற்கிடையே, காட்பாடி அருகே ரெயில் தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் கலைக்குமார் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். அவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாராவது தாக்கி கொலை செய்தார்களா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கலைக்குமாரின் உடலை புதுச்சேரிக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ஜெயஸ்ரீ கொலை வழக்கின் விசாரணை ஒருபுறம் நடைபெறும் நிலையில், கலைக்குமாரின் மரணம் தொடர்பாகவும் போலீசார் தனியாக விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: அண்ணா..! என்னால முடியல... என்னை வீட்டுக்குக் கூட்டிட்டு போங்க! கண்ணீருடன் உதவி கேட்ட 8 வயது சிறுவன்..! பகீர் பின்னணி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஜெயஸ்ரீ கொலை #Puducherry Nurse Murder #கலைக்குமார் #Katpadi Railway Track #ரவுடி கைது
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story