4 மாத கர்ப்பிணி மகளை ஆற்றில் தள்ளிவிட்டுக்கொன்ற தந்தை.. திடுக்கிடவைக்கும் காரணம்.. பதறவைக்கும் சோகம்.!
கர்ப்பிணி மகளை தந்தை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
18 வயதில் காதலால் கர்ப்பமான மகளை தந்தை உறவினர்களின் அழுத்தத்தால் கொலை செய்தார்.
காதல் & கர்ப்பம்:
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 18 வயதுடைய மகள் இருக்கிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவனை காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், பெண்மணி 4 மாத கர்ப்பமாகி இருக்கிறார்.
இதையும் படிங்க: சொத்துக்காக மனைவி கொலை.. ஹாலிவுட் சீரிஸ் பார்த்து அரங்கேறிய சம்பவம்.. இறுதியில் ட்விஸ்ட்.!
உண்மை தெரியவந்தது..
இந்த விஷயம் குறித்து சிறுமியின் தந்தை உட்பட உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் சிறுமியை கொலை செய்யும் எண்ணத்துடன் சிறுமியின் தந்தை உட்பட அவரின் 3 உறவினர்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்துள்ளனர்.
ஆற்றில் கொடூரம்:
இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று 18 வயது இளம்பெண்ணை ஆற்றுக்கு அழைத்துச்சென்று கீழே குதிக்க வற்புறுத்தி இருக்கின்றனர். ஆனால், அவர் தற்கொலை செய்ய மறுப்பு தெரிவிக்கவே, தந்தை மகளை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.
விசாரணை:
பின் இவர்கள் மட்டும் திரும்பி வந்த நிலையில், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகி இருக்கிறது. இதனையடுத்து, அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு வலைவீசி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: 2 வருஷமா ஒரே டார்ச்சல்... 2 மாதமாக போட்ட பலே திட்டத்தால் தீட்டிய கத்தி! ஆசிரியை படுகொலையில் வெளியான அதிர்ச்சி உண்மைகள்..!!!