×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சொத்துக்காக மனைவி கொலை.. ஹாலிவுட் சீரிஸ் பார்த்து அரங்கேறிய சம்பவம்.. இறுதியில் ட்விஸ்ட்.! 

மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். 

Advertisement

தொலைக்காட்சி தொடர் பாணியில் மனைவியை கொலை செய்து தப்ப முயன்றவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

தம்பதி: 

டெல்லியில் உள்ள ஜகத்புர் பகுதியில் வசித்து வருபவர் கமல் சிங் (வயது 52). இவர் மின்னணு & தகவல் தொடர்பு பொறியாளராக இருந்து வருகிறார். கமலின் மனைவி கோமலு. தம்பதிகளுக்கு சொத்து தொடர்பாக நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. 

இதையும் படிங்க: 2 வருஷமா ஒரே டார்ச்சல்... 2 மாதமாக போட்ட பலே திட்டத்தால் தீட்டிய கத்தி! ஆசிரியை படுகொலையில் வெளியான அதிர்ச்சி உண்மைகள்..!!!

வாக்குவாதம்: 

இந்நிலையில், சம்பவத்தன்று காலை நேரத்தில் இவர்களின் மகன் கௌரவ் நூலகத்துக்குச் சென்றுவிட்டார். மகள் வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் கமல் சிங் - கோமலு இருந்த நிலையில், இருவருக்கும் இடையே சொத்து தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் எழுந்துள்ளது. 

கொலை: 

அப்போது, ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கத்தரிக்கோலால் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ரத்தக்கறை படிந்த நிலையில் கத்தரிக்கோலை வீட்டில் மறைத்து வைத்துவிட்டு சென்றுள்ளார். 

சந்தேகமடைந்த மகன்: 

அன்றைய நாளில் தாயை தொடர்புகொள்ள இயலாத மகன், இரவில் வீட்டுக்கு வந்தபோது தாய் சடலமாக இருப்பது தெரியவந்தது. பின் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளியை கண்டறிந்தனர். 

கைது: 

கமல் சிங் சந்தேகத்துக்கு இடமான வகையில் பையுடன் சென்றதால், அவரை பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடந்தது. அவர் கொலைக்கு முன்னதாகவே வங்கியில் இருந்து ரூ.7 லட்சம் பணம் எடுத்ததும், நேபாளம் செல்ல திட்டமிட்டதும் உறுதியாகவே, பின்தொடர்ந்த அதிகாரிகள் அவரை மதுரா ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். 

அவரிடம் நடந்த விசாரணையில், ஹாலிவுட் வெப் சீரிஸான தி ஸ்டெர்கேஸ்-ல் வருவது போல மனைவியை திட்டமிட்டு கொலை செய்து தப்பியதாக கூறி இருக்கிறார். சொத்துக்காக மனைவியிடம் வாக்குவாதம் நடந்த நிலையில், அதனை அபகரிக்க கொலை நடந்ததாவும் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதையும் படிங்க: எல்லாத்துக்கும் நீ தான் காரணம்.... உயிருக்கு போராடி துடி துடித்த கணவன்! கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த அந்த ஒரு காரியம்...! பகீர் பின்னணி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #delhi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story