PM Narendra Modi: 'சி.பி. ராதாகிருஷ்ணனுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி' - நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.!
துணை குடியரசு தலைவர் & மாநிலங்களவை தலைவரை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
Parliament Session: குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தில், மாநிலங்களவையை முன்னின்று நடத்தும் சி.பி. ராதாகிருஷ்ணனை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று பேசினார்.
டெல்லியில் இன்று முதல் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், மாநிலங்களவையை தலைமையேற்று நடத்துகிறார். மாநிலங்களவை தலைவராக பொறுப்பேற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி பேச்சு:
அப்போது, அவர் பேசுகையில், "நாட்டுக்காக உழைக்க வாழ்க்கையை அர்ப்பணித்த மனிதர் சி.பி. ராதாகிருஷ்ணன். அவர் குடியரசு தலைவராக பொறுப்பேற்றபின், முதல் முறையாக அவையை வழிநடத்துகிறார். நாட்டை கட்டமைக்கும் அம்சம் தொடர்பாக விவாதம் செய்யவே நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. எளிமையான குடும்பத்தில் பிறந்து இன்று அவரது மக்களுக்கான உழைப்பால் துணை குடியரசு தலைவராக உயர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: தொடங்கியது பாராளுமன்ற கூட்டத்தொடர்.. பிரதமர் நரேந்திர மோடி முக்கிய கோரிக்கை.!
விவசாயி மகன்:
இது அவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பெருமையான தருணம். உங்களை வரவேற்பது பெருமையான தருணம். அவையின் சார்பாக, உங்களை மனதார வாழ்த்துகிறேன். விவசாயியின் மகன் குடியரசு துணை தலைவராக நம் முன் இருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி" என கூறினார்.
துணை குடியரசுத் தலைவரை வரவேற்று பிரதமர் மோடி உரை: