#Breaking: தொடங்கியது பாராளுமன்ற கூட்டத்தொடர்.. பிரதமர் நரேந்திர மோடி முக்கிய கோரிக்கை.!
குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.
Parliament Session: டெல்லி பாராளுமன்றத்தில் இன்று (டிச.01) முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை சுமூகமான முறையில் நடத்தி முடிக்க பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிச.01) முதல் தொடங்கி நடைபெறுகிறது. டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில், தேசிய அளவிலான பிரச்னைகள், பொருளாதார விவாதங்கள், முக்கிய சட்ட முன்மொழிவுகள் ஆகியவை பரிசீலிக்கப்படவுள்ளன.
எதிர்க்கட்சிகள் திட்டம்:
அதே நேரத்தில், மத்திய அரசு அணுசக்தி துறையில் தனியார் முதலீட்டை அனுமதிக்கும் மசோதாக்கள், காப்பீட்டு சட்டத்திருத்தம் உள்ளிட்ட 14 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எதிர்கட்சிகளை பொறுத்தவரையில், சமீபத்திய SIR விவகாரம், டெல்லி குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பரிசீலனை செய்ய தயாராகி இருக்கின்றன.
செய்தியாளர்கள் சந்திப்பு:
குளிர்கால கூட்டத்தொடரை அமைதியாக நடத்த டெல்லியில் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டமும் நேற்று நடைபெற்றது. இதனிடையே, இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் எதிர்க்கட்சிகள் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
புதிய நம்பிக்கை:
இதுதொடர்பாக அவர் பேசுகையில், "இந்தியா ஜனநாயக நாடு. மத்திய அரசின் திட்டங்கள் எப்போதும் வளர்ச்சியை நோக்கி இருக்கும். பீகார் மாநிலத்தில் நடந்த தேர்தலில் அதிக வாக்குகள் பதிவு செய்யப்பட்டது, இந்தியாவின் ஜனநாயக வலிமையை பறைசாற்றுகிறது. சர்வதேச அளவில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்திய பொருளாதாரம் உலகத்துக்கு புதிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது.
பொறுப்புடன் செயற்படுங்கள்:
குளிர்கால கூட்டத்தொடர் போர்க்களமாக, ஆணவத்திற்கான அடையாளமாக மாறக்கூடாது என்பதை அனைத்து கட்சிகளிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் பிரதிநிதியாக எதிர்காலத்தை சிந்திக்கும் எண்ணத்துடன் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சில கட்சிகளுக்கு அடுத்தடுத்த தோல்வி துரதஷ்டமாக இருக்கிறது" என பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி பேச்சு: