குட்டி சிறுமி ஸ்கேட்டிங் ஓட்டும் போது நடந்த விபரீதம்! நொடிப்பொழுதில் நடந்த அந்த அதிர்ச்சி சம்பவம்... பகீர் காட்சி..!!!
பிம்ப்ரி-சிஞ்ச்வாட் செக்டார் 12 குடியிருப்பு வளாகத்தில் காரின் சக்கரத்தில் சிக்கி சிறுமி காயமடைந்தார். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிம்ப்ரி-சிஞ்ச்வாட் செக்டார் 12 பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறுமி ஒருவர் காரின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். 5 முதல் 6 வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுமி, தனது பொம்மை மிதிவண்டியை ஓட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கார் சென்ற பாதையில் வந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.
திரும்பிய கார்... சக்கரத்தில் சிக்கிய சிறுமி
இரவு சுமார் 10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த சிசிடிவி காட்சியில், கார் ஒன்று திடீரென திரும்பும்போது சிறுமி அதன் பாதையில் வருவதும், அடுத்த சில நொடிகளில் காரின் சக்கரத்தின் கீழ் சிக்குவதும் பதிவாகியுள்ளது. இதைப் பார்த்தவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிளைண்ட் ஸ்பாட் காரணமா?
கார் ஓட்டுநரின் பார்வைக்கு சிறுமி தெளிவாகத் தெரியாத பகுதியில் இருந்ததே விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வாகனம் திரும்பும்போது உருவாகும் Blind Spot பகுதியில் சிறுமி இருந்ததால் ஓட்டுநரால் அவரை கவனிக்க முடியாமல் போயிருக்கலாம் என கூறப்படுகிறது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார்
சிறுமி தற்போது சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எம்ஐடிசி போசாரி காவல் நிலைய மூத்த ஆய்வாளர் கணேஷ் ஜாம்தார், சம்பவம் குறித்து உறுதிப்படுத்தியுள்ளார். சிறுமியின் பெற்றோர் இதுவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்காததால், அதிகாரப்பூர்வமாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சைக்கோவை காதலித்ததால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கை-கால்கள் கட்டி எரித்துக்கொலை.!