தினமும் பள்ளிக்கு குடிபோதையில் வரும் ஹெட் மாஸ்டர்! மலம் கழித்துவிட்டு 3-ஆம் வகுப்பு மாணவனை அள்ள சொன்ன கொடூரம்! அடுக்கடுக்கான புகார்களை சொல்லி கதறும் பெற்றோர்கள் ..!!!
மத்தியப் பிரதேசத்தில் குடிபோதையில் பள்ளிக்கு வரும் தலைமை ஆசிரியர், மாணவர்களை மலம் சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் மைஹார் மாவட்டத்தில் உள்ள அமூரா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது அதிர்ச்சிகரமான புகார் எழுந்துள்ளது. குடிபோதையில் பள்ளிக்கு வரும் அவர், பள்ளி வளாகத்திலேயே மலம் கழிப்பதாகவும், அதை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய வற்புறுத்துவதாகவும் பெற்றோரும் குழந்தைகளும் குற்றம்சாட்டியுள்ளனர். 3-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தன்னை மலம் அள்ளச் சொல்லி ஆசிரியர் துன்புறுத்தியதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களிடம் அத்துமீறியதாக புகார்
அமூரா தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர், வகுப்புகள் தொடங்கிய பிறகும் தாமதமாகவே பள்ளிக்கு வருவதாக கிராம மக்கள் கூறியுள்ளனர். பல நேரங்களில் அவர் குடிபோதையில் இருப்பதாகவும், வாயில் குட்கா மென்றபடி பள்ளி சுவர்களில் துப்பி வளாகத்தை அசுத்தப்படுத்துவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளியின் மதிய உணவுத் திட்டமும் முறையாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. பள்ளி வளாகத்தில் அசுத்தம் செய்துவிட்டு, அதனைச் சுத்தம் செய்யும் பணியை சிறுவர், சிறுமிகளிடம் ஒப்படைத்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக 3-ம் வகுப்பு மாணவர் ஒருவர், தன்னை மலம் அள்ளும்படி தலைமை ஆசிரியர் கட்டாயப்படுத்தியதாகக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதை நிலையில் இருந்த காட்சிகள் வைரல்
இதற்கிடையே, ஊடகவியலாளர்கள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்தபோதும் தலைமை ஆசிரியர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தனது டேப்லெட்டில் யூடியூப் வீடியோக்களை பார்த்தபடியே அவர் அலட்சியமாக பதிலளித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பள்ளி சுவர்களில் காணப்பட்ட குட்கா கறைகளும் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
பணியிடை நீக்க பரிந்துரை
மாணவர்கள் தெரிவித்த புகார்களை தலைமை ஆசிரியர் மறுத்துள்ளார். இருப்பினும், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தபோது சில குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாகக் கூறப்படும் நிலைமைகள் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, வட்டாரக் கல்வி அலுவலர் ராஜேஷ் திவேதி தலையிட்டு, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை பாதிக்கும் வகையில் நடந்துகொண்டதாக கூறப்படும் தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய மாவட்டக் கல்வி அலுவலருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னோட காதலி உனக்கு பொண்டாட்டியா? நெருங்கிய நண்பனாக பழகி தீட்டிய திட்டம்... கள்ளக்காதலுக்கு தடையான கணவன் எலும்பு கூடாக மீட்கப்பட்ட பயங்கரம்.!!!