கடவுளே காப்பாத்திட்டாரு போல...! 4-வது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்த சிறுவன்.... அதிஷ்டவாசமாக அடுத்த நொடி எழுந்து நடந்துள்ளான்..! திகில் சம்பவம்..!!!
நொய்டாவில் 4-வது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த 6 வயது சிறுவன், 2-வது மாடி மேற்கூரையில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 4-வது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த 6 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். நேரடியாக தரையில் விழாமல், 2-வது மாடியில் இருந்த சிமெண்ட் மேற்கூரையில் விழுந்ததால் சிறுவனுக்கு பெரிய காயம் ஏற்படவில்லை. கீழே விழுந்த சில நொடிகளிலேயே எழுந்து நடக்கத் தொடங்கிய சிறுவனின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
பாட்டி சந்தைக்குச் சென்ற நேரத்தில் விபத்து
நொய்டாவின் செக்டார்-82 பகுதியில் உள்ள கிரீன் வியூ அடுக்குமாடிக் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. 40-ம் எண் பிளாட்டின் பால்கனியில் இருந்த சிறுவன், எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதையும் படிங்க: அதிகாலை கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் 14 பேரில் 13 பேர் பரிதாப பலி...! நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்..!!!
சிறுவனின் தந்தை வேலை காரணமாக வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதனால், சிறுவன் தனது பாட்டியுடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். விபத்து நடந்த நேரத்தில் பாட்டி சந்தைக்குச் சென்றிருந்துள்ளார். அந்த நேரத்தில் பால்கனிக்குச் சென்ற சிறுவன் தவறி கீழே விழுந்துள்ளார்.
மேற்கூரையில் விழுந்ததால் உயிர் தப்பிய சிறுவன்
4-வது மாடியில் இருந்து விழுந்த சிறுவன், நேரடியாக தரையில் விழாமல் 2-வது மாடியில் இருந்த சிமெண்ட் மேற்கூரையில் விழுந்துள்ளார். இதனால் பெரிய அளவிலான காயங்கள் ஏற்படாமல் தப்பியுள்ளார். கீழே விழுந்ததும் சிறுவன் எழுந்து நடக்க முயன்றதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் நிம்மதி அடைந்தனர்.
மருத்துவ பரிசோதனையில் பெரிய காயம் இல்லை
இதையடுத்து சிறுவனுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், சிறுவன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் பெற்றோர், குழந்தைகள் பால்கனி மற்றும் ஜன்னல் பகுதிகளுக்குச் செல்லாமல் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.