அதிகாலை கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் 14 பேரில் 13 பேர் பரிதாப பலி...! நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்..!!!
ஜார்க்கண்ட் ராம்கர் மாவட்டத்தில் ராஜ்ரப்பா கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் வாகனம் விபத்துக்குள்ளானதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் இன்று அதிகாலை நடந்த கோர சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ராஞ்சி-பாட்னா தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளானதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்ரப்பா கோவிலுக்குச் சென்ற பக்தர்கள்
ராம்கர் மாவட்டத்தில் உள்ள ராஞ்சி-பாட்னா தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஜங்காரோ கிராமத்தைச் சேர்ந்த 14 பக்தர்கள், ராஜ்ரப்பா கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பயணித்த ஸ்கார்பியோ கார் விபத்தில் சிக்கியது. இதில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்கள் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்
விபத்து நடந்ததும் அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சேதமடைந்த காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்ட பொதுமக்கள், படுகாயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எவ்வளவு ஜாலியா இருக்கு... ஏரிக்குள் சுதந்திரமாக ராஜநடை போடும் முதலை..! வைரலாகும் அரிய வீடியோ..!!!