×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

43-வது மாடியிலிருந்து குதித்த 35 வயது இளைஞர்! 2 துண்டான உடல்.. அதிரவைக்கும் காரணம்..? கலங்கவைக்கும் சம்பவம்...!!!

நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பின் 43-வது மாடியில் இருந்து குதித்து 35 வயது இளைஞர் உயிரிழந்தார். கடன் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுத்ததாக போலீஸ் விசாரணையில் தகவல்.

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 43-வது மாடியில் இருந்து குதித்து 35 வயது இளைஞர் உயிரிழந்தார். அரியானா மாநிலம் மானேசரைச் சேர்ந்த சம்பவ் என்பவர், செக்டார் 94-ல் உள்ள பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் அறை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார். கடன் மற்றும் கடுமையான நிதி நெருக்கடியால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

43-வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்

சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. செக்டார் 94 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த சம்பவ், கட்டிடத்தின் 43-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து 2 துண்டான அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 180 பேரின் உயிர் காத்த மகா வீரனுக்கு 1 கோடி வெகுமதி அளித்த Mankind pharma நிறுவனம்..! விமானிக்கு விழுந்த பாராட்டு மழை..!!!

உடலை மீட்டு போலீசார் விசாரணை

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் தொல்லையால் விபரீத முடிவு?

முதற்கட்ட விசாரணையில் சம்பவ் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் தொல்லையை எதிர்கொண்டிருந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே அவர் விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், சம்பவத்திற்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நொய்டாவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ் எப்போது முதல் நிதி சிக்கலில் இருந்தார், அவருக்கு ஏற்பட்ட கடன் பிரச்சினைகள் என்ன என்பது உள்ளிட்ட தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: அது என் மகன் தான்..! அவனது உடலை கொடுங்க! ஆனால்.. மறுத்த போலீஸ் அதிகாரிகள்! 15 மாத போராட்டதுக்கு பிறகு வெளிவந்த DNA டெஸ்ட் உண்மை...! இறுதியில் அந்த தந்தை செய்த அதிர்ச்சி காரியம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#நொய்டா தற்கொலை #Noida News #நிதி நெருக்கடி #கடன் தொல்லை #43rd Floor
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story