×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காலையில் காதலரை கைபிடித்த 21 வயது இளம்பெண்! மாலையில் ஆட்டுக்கொட்டகை கிணற்றில் காத்திருந்த அதிர்ச்சி...! பகீர் சம்பவம்!!!

கர்நாடகாவில் காதலரை திருமணம் செய்த சில மணி நேரங்களில் புதுமணப்பெண் மாயமானார். மறுநாள் பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் காதலரை திருமணம் செய்த 21 வயது இளம்பெண், சில மணி நேரங்களிலேயே மாயமாகி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்த நிலையில், புதுமணப்பெண்ணின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலரை கரம் பிடித்த சுமலதா

கரினபாலய்யனஹட்டியைச் சேர்ந்த சுமலதாவுக்கும், அவரது உறவினரான கஜேந்திராவுக்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய சுமலதா, போரேஷ் மற்றும் அசோக் ஆகிய உறவினர்களின் உதவியுடன் நாயக்கனஹட்டி பகுதியில் உள்ள ஆட்டுக்கொட்டகையில் தங்கியிருந்தார்.

இதையும் படிங்க: உங்க பொண்ணை பாருங்க... வீடியோ காலில் மாமனார், மாமியார்கு அந்த காட்சியை காட்டிய கொடூரம்! அடுத்து அந்த வார்த்தையை சொல்லிவிட்டு போனை கட் செய்த கணவன்! அடுத்து நடந்த பயங்கரம்.!!!

மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் ராமசாகரா அருகே உள்ள ஈஸ்வரநதிஹிப்பே கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் கஜேந்திராவும் சுமலதாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமண புகைப்படங்கள் சுமலதாவின் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பப்பட்டன. திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதி மீண்டும் ஆட்டுக்கொட்டகைக்கு சென்றுள்ளனர்.

திருமணமான சில மணி நேரங்களில் மாயம்

அன்று மாலை இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற சுமலதா, நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் கஜேந்திராவும் அவரது நண்பர்களும் சுற்றுப்புறப் பகுதிகளில் தேடினர். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் பதற்றம் ஏற்பட்டது.

இதற்கிடையில் மகளைக் காணவில்லை என சுமலதாவின் பெற்றோர் சனிக்கிழமை தலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

பாழடைந்த கிணற்றில் சடலம் மீட்பு

விசாரணையின் ஒரு பகுதியாக என். மகாதேவபுரா கிராமத்தில் உள்ள ஆட்டுக்கொட்டகை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் போலீசார் தேடுதல் நடத்தினர். அப்போது அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் சுமலதாவின் உடல் இருப்பது தெரியவந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை போலீசார் அவரது சடலத்தை மீட்டனர்.

திருமணம் நடைபெற்ற அன்றே புதுமணப்பெண் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித் குமார் பண்டாரு சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து வழக்கு மொளகால்முரு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, சுமலதா மரணம் தொடர்பான காரணம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். Karnataka Crime வழக்கில் அடுத்தகட்ட விசாரணை முடிவுகளின் அடிப்படையில் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: சமாதானமாக பேசி அம்மா வீட்டில் இருந்த மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்த கணவன்! இரவு கொடூரமாக தாக்கி... தூக்கில் தொங்கவிட்டு மாமனார், மாமியாருக்கு போட்ட வீடியோ கால்! பகீர் சம்பவம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#சுமலதா மரணம் #Karnataka crime #புதுமணப்பெண் #கிணற்றில் சடலம் #Molakalmuru Police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story