அடக்கடவுளே... இப்படியா ஆகணும்! வாட்டர் டேங்க் நிரம்பி வழிந்த தண்ணீரில் இருந்த எமன்! சகோதரிகள் 2 பேரும் பரிதாபமாக உயிரிழப்பு..! பெத்த புள்ளையை இழந்து கதறும் பெற்றோர்...!!!
நெல்லூர் ஹரிநாதபுரத்தில் தண்ணீர் தரையில் தேங்கிய நிலையில் மின்கசிவு ஏற்பட்டதில் 11, 7 வயது சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லூர் மாவட்டம் ஹரிநாதபுரத்தில் வீட்டில் ஏற்பட்ட மின்கசிவில் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். வாட்டர் டேங்க் நிரம்பி தண்ணீர் தரையில் வழிந்த நிலையில், மெயின் சுவிட்ச் அணைக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தரையில் தேங்கிய தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததில் 11 மற்றும் 7 வயதுடைய சகோதரிகள் உயிரிழந்தனர்.
தரையில் தேங்கிய தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது
ஹரிநாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் வாட்டர் டேங்க் நிரம்பியதால் தண்ணீர் வெளியேறி தரை முழுவதும் தேங்கியுள்ளது. அப்போது வீட்டின் மெயின் போர்டு சுவிட்ச் ஆன் நிலையிலேயே இருந்ததாக தெரிகிறது. இதனால் தண்ணீரில் மின்கசிவு ஏற்பட்டு ஆபத்தான சூழல் உருவானது.
இதையும் படிங்க: டேபிள் ஃபேனை போட்ட மனைவிக்கு நடந்த விபரீதம்! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவரும் உயிரிழப்பு..! கதறும் குடும்பத்தினர்...!!!
மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு
அந்த நேரத்தில் வீட்டில் இருந்த ஜோதி உரிலகண்டி (11), அமுல்யா (7) ஆகிய இரு சகோதரிகளும் தண்ணீரில் சிக்கியுள்ளனர். எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்த இரு சிறுமிகளின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக நெலூர் ஜிஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டு குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.