×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காட்டுக்குள் துண்டாக வெட்டப்பட்ட பெண்னின் உடல் … நரபலி பூஜை? ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சி!

காட்டுக்குள் துண்டாக வெட்டப்பட்ட பெண்னின் உடல் … நரபலி பூஜை? ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சி!

Advertisement

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் காட்டுப் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பலியாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டாங்கி பஸ்தி அருகே உள்ள சட்டனியா பாலம் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார் மக்தோ என்பவர் சென்றபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் பெண்ணின் கால் ஒன்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்களை அழைத்து வந்து பார்த்தபோது, காட்டுக்குள் பெண்ணின் தலை தனியாகவும், உடல் தனியாகவும் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பலியாபூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: தடுக்க வேண்டிய குடும்பமே இப்படி வேடிக்கை பாக்குது... பேயை விரட்ட பெண்ணை செய்த கொடுமை! நீயும் ஒரு பெண் தானே... பேயை விரட்டுறியா? வெளுத்துறியா? வைரலாகும் ஷாக் வீடியோ..!!!

மேலும், போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பெண்ணின் தலை பிளாஸ்டிக் சாக்குப்பையில் வைக்கப்பட்டிருந்ததும், உடல் வேறு பகுதியில் வீசப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், சம்பவ இடத்திற்கு அருகே அகர்பத்திகள் மற்றும் சில பூஜைப் பொருட்கள் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்தக் கொலை நரபலியுடன் தொடர்புடையதாக இருக்குமா என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

எனினும், நரபலி நடந்ததாக போலீசார் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. கொலைக்கான காரணம் என்ன, பூஜைப் பொருட்கள் அங்கு எதற்காக வைக்கப்பட்டிருந்தன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் யார் என்பதும் இதுவரை கண்டறியப்படவில்லை. அவர் உள்ளூரைச் சேர்ந்தவரா அல்லது வேறு பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ராஞ்சியில் இருந்து தடயவியல் நிபுணர்கள் குழுவும், மோப்ப நாய் படையும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் காணாமல் போனோர் குறித்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: பகலில் கள்ளக்காதலனுடன்.. இரவில் கணவனுடன்! திருமணமான 3 மாதங்களில் மனைவியின் மாஸ்டர் பிளான்..... பின்னணியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Narapali pooja #superstition #Murder #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story