உச்சக்கட்ட கொடூரம்! இன்ஸ்டா நண்பனால் 24 மணி நேரம் சித்திரவதை அனுபவித்த 12 ஆம் வகுப்பு மாணவி! கைவிலங்கிட்டு, பெல்டால் அடித்து கொடூரமாக பாலியல் தொல்லை... பகீர் சம்பவம்!!!
நாக்பூரில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞரால் 16 வயது மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதைக்கு ஆளான நிலையில், போலீசார் சைபர் தடயங்கள் மூலம் மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிராவின் நாக்பூரில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 19 வயது இளைஞரால் 16 வயது பள்ளி மாணவி கடத்தப்பட்டு, வாடகை வீட்டில் 24 மணி நேரத்திற்கும் மேலாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை மற்றும் தாக்குதலுக்கு ஆளானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சைபர் தடயங்களை பயன்படுத்தி போலீசார் மாணவியை உயிருடன் மீட்டுள்ள நிலையில், சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் நட்பு விபரீதமாக மாறியது
போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்ஸ்டாகிராமில் 'ஆகாஷ் மெஹ்ரா' என்ற பெயரில் அறிமுகமான நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் அவர், மாணவியை வாடகை வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு 24 மணி நேரத்திற்கும் மேலாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை, சித்திரவதை மற்றும் கத்தியால் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பார்க்கவே அருவருப்பாக இருக்கு.... 9 வயது சிறுமியிடம் அத்துமீறய 55 வயது காமமுகனை அடித்து கொன்ற மக்கள்! பகீர் வீடியோ..!!!
சைபர் தடயங்கள் மூலம் மாணவி மீட்பு
மாணவியின் தந்தை அளித்த கடத்தல் புகாரைத் தொடர்ந்து, போலீசார் Instagram உரையாடல்கள் மற்றும் சைபர் தடயங்களை ஆய்வு செய்து அந்த வீட்டைக் கண்டுபிடித்தனர். அதன்பின் அங்கு விரைந்து சென்று மாணவியை மீட்டனர். அப்போது, அவர் கைவிலங்கிடப்பட்டு கட்டிலில் கட்டப்பட்டிருந்ததுடன், உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.
தடயவியல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் ஆய்வு
விசாரணையில், கைது செய்யப்பட்டவர் தானேவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து கைவிலங்குகள், தோல் பெல்ட்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் POCSO சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், மின்னணு சாதனங்கள், டிஎன்ஏ மாதிரிகள் மற்றும் கைரேகைகள் உள்ளிட்ட தடயவியல் ஆதாரங்கள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. கைதான இளைஞரை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விசாரணையின்போது அவர் போலீசார் தன்னை தாக்கியதாகவும், பணம் பறிமுதல் செய்ததாகவும் புகார் தெரிவித்ததை நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. இதையடுத்து, சட்டப்படி மற்றும் நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.