×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மோசடி வழக்கு.! திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்.! என்ன நடந்தது?

மோசடி வழக்கு.! திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்.! என்ன நடந்தது?

Advertisement

நட்புனா என்னன்னு தெரியுமா, நளனும் நந்தினியும், முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் லிப்ட் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில்
மும்பையில் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ. 5.24 கோடி மோசடி செய்ததாக ரவீந்தருக்கு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த அஜய் ஜெகதீஷ் என்பவரிடம் ரோகன் மேனன் என்பவர் ஆன்லைன் வர்க்கத்தில் அதிக லாபம் ஈட்டி தருவதாகக் கூறி மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு ரோகன் மேனன் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இந்த மோசடி விவாகரத்தில் தயாரிப்பாளர் ரவீந்தருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மும்பை சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று சென்னை  ரவீந்தர் இல்லத்திற்குச சென்றபோது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அக்காரணத்தினால் அவரை கைது செய்யாமல், காவல்துறையினர் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். மேலும் இந்த வழக்கில் அவரது கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அப்படித்தான்.. போடு.. அறிவுக்கரசியை வெளுத்து வாங்கிய குணசேகரன் வீட்டுப் பெண்கள்! எதிர்நீச்சல் புரொமோ...

இதையும் படிங்க: அரவணைப்பு இல்லை.. சீதா குடும்பத்தை பார்த்து அழுது புலம்பும் முத்து மற்றும் மீனா! சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Raveendar #Mumbai Police #Summon
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story