அரவணைப்பு இல்லை.. சீதா குடும்பத்தை பார்த்து அழுது புலம்பும் முத்து மற்றும் மீனா! சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்...
அரவணைப்பு இல்லை.. சீதா குடும்பத்தை பார்த்து அழுது புலம்பும் முத்து மற்றும் மீனா! சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில், தற்போது மீனா மற்றும் முத்துவின் பாசம் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் ரசிகர்களை ஈர்த்துள்ளன. பிரிந்து இருந்த இவர்கள், ஒருவரின் மீது ஒருவர் காட்டும் அதிகமான பாசம் காரணமாக மீண்டும் இணைந்துள்ளனர்.
இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த ஸ்ருதி, ரவியிடம் இந்த சந்தோஷத்தை பகிர்ந்து மகிழ்கிறார். இதன் பின், மீனா சீதா வீட்டில் நடைபெறும் மாப்பிள்ளை விருந்துக்கு செல்கிறார். அங்கு சீதாவின் குடும்பத்தினரை அவரது மாமியார் மரியாதையுடன் நடத்துவது, மீனாவை மனமுடைந்து வருத்தப்பட வைத்தது.
புரொமோ அப்டேட்:
நாளைய எபிசோடிற்கான புரொமோவில், மீனா சீதா வீட்டில் நடந்த அனைத்தையும் முத்துவிடம் பகிர்கிறாள். அதற்கு பதிலாக முத்து, “உனக்கு மாமியார் பாசமும், எனக்கு அம்மா பாசமும் கிடைக்கப்போவதில்லை” என வருத்தம் தெரிவிக்க, இருவரும் சோகத்தில் மூழ்குகிறார்கள்.
இதையும் படிங்க: அப்பா சொன்ன ஒரு வார்த்தை! தாலியை குமரவேல் மூஞ்சில் தூக்கி வீசிய அரசி! பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ
இதையும் படிங்க: அட.. இந்த விஷயம் தெரியுமா?? கில்லி படத்தில் நடிகர் விமல் பாடியிருக்காரா!! அதுவும் எந்த பாடலில் தெரியுமா??