புல் வெட்ட சென்ற 65 வயது மூதாட்டி! திடீரென தாக்கிய காட்டு நரி! தைரியமாக சுமார் 20 நிமிடம் சேலையால் கழுத்தை..... பகீர் சம்பவம்!
மத்தியப் பிரதேசத்தில் 65 வயது மூதாட்டி நரியுடன் 30 நிமிடங்கள் போராடி புடவையால் கயிறு செய்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம், ஒரு மூதாட்டியின் தைரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 65 வயது சூர்ஜியா பாய் ஜாதவ், உயிர் பிழைப்பதற்காக காட்டு நரியுடன் நேருக்கு நேர் மோதிச் சுமார் 30 நிமிடங்கள் போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் நரி தாக்குதல்
பதர்வாஸ் காவல் நிலையம் அருகே உள்ள பர்காதி கிராமத்தைச் சேர்ந்த சூர்ஜியா, திங்கள்கிழமை கால்நடைகளுக்கு புல் வெட்டிச் சென்றபோது, பாலம் அருகே திடீரென ஒரு காட்டு நரி அவரைத் தாக்கியது. அந்த தாக்குதலில் அவர் கால்களில் கடியுண்டார். அவர் கூச்சலிட்டபோதும் யாரும் உதவிக்கு வரவில்லை.
மூதாட்டியின் போராட்டம்
உயிரைக் காப்பாற்ற, சூர்ஜியா தைரியமாக நரியின் வாயை கைகளால் இறுக்கப் பிடித்தார். நரி மேலும் தாக்க முயன்றபோது, அவர் அதன் மேல் அமர்ந்து தாடைகளைப் பிரித்து கட்டுப்படுத்தினார். பின்னர் தனது புடவையை கயிறு போல் பயன்படுத்தி, நரியின் கழுத்தை நெரித்து கொன்றார். இந்த நேர்முக போராட்டம் சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.
மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்
சம்பவத்தை அறிந்த குடும்பத்தினர் விரைவாக வந்தனர். அப்போது சூர்ஜியா மயக்கமடைந்து ரத்தக் காயங்களுடன் கிடந்தார். நரி இறந்து கிடந்தது. உடனடியாக அவர் ஆம்புலன்ஸில் பதர்வாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவருக்கு பலத்த காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியின் உறுதியான மனநிலை மற்றும் தைரியம் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பேயின் வரவா! 6 மணி நேரமாக எந்த ஒரு அசைவும் இல்ல! இளைஞரின் பிணத்தை தூக்க ஆம்புலன்ஸோடு வந்த போலீஸ்! இறுதியில் நடந்த அதிர்ச்சி.....