×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பேயின் வரவா! 6 மணி நேரமாக எந்த ஒரு அசைவும் இல்ல! இளைஞரின் பிணத்தை தூக்க ஆம்புலன்ஸோடு வந்த போலீஸ்! இறுதியில் நடந்த அதிர்ச்சி.....

மத்திய பிரதேச சாகர் மாவட்டத்தில் பிணம் என்று நினைத்த இளைஞர் உயிருடன் எழுந்த சம்பவம் அதிர்ச்சியையும் நகைப்பையும் ஏற்படுத்தி மாவட்டம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

சாகர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம், அங்குள்ள மக்களிடையே பெரும் பரபரப்பையும் நம்ப முடியாத வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிணமாக நினைத்த இளைஞர் உயிருடன் எழுந்தது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.

பிணம் என்று நினைத்த இளைஞர் உயிருடன் எழுந்தார்

மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டம் குராய் கிராமத்தில் சாலையோர சகதியில் விழுந்து 6 மணி நேரமாக அசைவின்றி இருந்த ஒரு இளைஞரை, கிராம மக்கள் பிணம் என்று எண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை புரட்ட முயன்றபோது, திடீரென அந்த இளைஞர் எழுந்து, “நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்!” என்று கூறியதும் அங்கு இருந்தோர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

போதைய காரணமாக சகதியில் விழுந்தார்

விசாரணையில், அதிகமாக மது அருந்தியதால் அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபோது தடுமாறி சகதியில் விழுந்ததாக தெரியவந்தது. மது போதையின் காரணமாக அவர் எழுந்திருக்க முடியாமல் அசைவின்றி கிடந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இப்படி ஒரு பாம்பா! 20 வயது இளம்பெண்ணை கடித்த விஷ பாம்பு! பெண் இறந்தும் போகல! பிணம் வந்த பிறகும் வீட்டை விட்டு போகாத பாம்பு! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கிராம மக்களின் பயம் மற்றும் போலீசின் நடவடிக்கை

இளைஞர் திடீரென எழுந்து பேச ஆரம்பித்ததும், சிலர் பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டனர். அங்கு இருந்தோர் இதை 'பேயின் வரவு' போல எண்ணியதாகவும் கூறினர். பின்னர் போலீசார் அவருக்கு எச்சரிக்கை மற்றும் ஆலோசனைகளை வழங்கி, பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இந்த வினோதமான சம்பவம் தற்போது மாவட்டம் முழுவதும் பேசுபொருளாகி, மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: மனைவி கள்ளக்காதல் தொடர்பு! கணவன் கொடுத்த புகாரில் கூப்பிட்டு கண்டித்த போலீசார்! வெறியோடு கள்ளக்காதலன் எடுத்த விபரீத முடிவு! ஒரே நேரத்தில் நடந்த இரட்டை அதிர்ச்சி சம்பவம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மத்திய பிரதேசம் #Sagar District #அதிர்ச்சி சம்பவம் #போலீசார் #Drunk Youth
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story