×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படி ஒரு மாமியாரா? அடுத்தடுத்து நாட்களில் கணவன், மாமனார் உயிரிழப்பு! மருமகளுக்காக மாமியார் செய்த அந்த ஒரு காரியம்... இறுதியில் தாயாகவே மாறிய தருணம்! நெகிழ்ச்சி சம்பவம்..!!!

கணவனையும் மாமனாரையும் இழந்த மருமகளுக்கு மாமியார் மறுமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கணவனை இழந்த இளம் பெண்ணுக்கு அவரது மாமியாரே மறுமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கணவன் மற்றும் மாமனாரை அடுத்தடுத்த நாட்களில் இழந்த மீனாட்சிக்கு, மாமியார் சுனிதா புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளார். தனது மருமகளை மகளாகக் கருதி இந்த முடிவை எடுத்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்தடுத்த நாட்களில் கணவன், மாமனார் உயிரிழப்பு

ஹரித்வாலைச் சேர்ந்த மீனாட்சிக்கும் ரோஹித்துக்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயது மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ரோஹித்தின் தந்தை கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி உயிரிழந்தார். அந்த துயரத்தில் குடும்பம் இருந்து மீளாத நிலையில், மறுநாளே ரோஹித்தும் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: தாயுடன் ஏற்பட்ட தகராறு..! ஆத்திரம் தாங்காமல் குத்தி கொன்ற 20 வயது மகன்...! ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்த தாய்... பகீர் சம்பவம்..!!!

மருமகளின் எதிர்காலத்தை நினைத்த மாமியார்

கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் தவித்த மீனாட்சியின் நிலை சுனிதாவை மிகவும் பாதித்தது. இளம் வயதில் கணவனை இழந்துள்ளதால், மீனாட்சிக்கு இன்னும் நீண்ட வாழ்க்கை இருப்பதை உணர்ந்த அவர், தனது இளைய மகன் மோஹித்துடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், மீனாட்சிக்கு ஏற்ற வரனைத் தேடும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டனர்.

அப்போது யோகேஷ் என்பவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆர்ய சமாஜ் கோவிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் புதிய வாழ்க்கையை மீனாட்சி தொடங்கினார்.

தாயாக நின்ற மாமியார்; சகோதரனாக கடமையாற்றிய மைத்துனர்

திருமண நிகழ்வில் சுனிதா, ஒரு தாயின் இடத்தில் இருந்து கன்யாதானம் செய்து வைத்தார். அவரது இளைய மகன் மோஹித்தும் சகோதரனாக இருந்து திருமண ஏற்பாடுகளில் முக்கிய பங்காற்றினார். கணவனை இழந்த தனது மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்து, மகளைப் போல புதிய இல்லத்திற்கு வழியனுப்பிய குடும்பத்தின் அணுகுமுறை தற்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

குடும்ப உறவுகளில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் பேசப்படும் நிலையில், முசாபர்நகரில் நடந்த இந்த திருமணம் வேறுபட்ட மனிதநேய அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளது. கணவனை இழந்த பெண்ணின் எதிர்காலத்தையும், அவரது இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

 

இதையும் படிங்க: தற்கொலை இல்லை..! இது கொலை... என் தம்பி முகம் முழுக்க காயம்! தற்கொலை போல சித்தரிப்பு... கதறி அழுது நீதி கேட்கும் அண்ணன்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மறுமணம் #Mother-in-law #மருமகள் #Muzaffarnagar #Remarriage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story