×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நள்ளிரவு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ராட்சத மலைப்பாம்பு…! அலறியடித்து ஓடிய கிராம மக்கள்...! துணிச்சலாக பெண் செய்த அந்த காரியம்... திகில் வீடியோ!!!

உத்தரப் பிரதேசம் மொராதாபாத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ராட்சத மலைப்பாம்பை ஷாசியா பர்வீன் என்ற இளம்பெண் துணிச்சலுடன் பிடித்து வெளியேற்றிய வீடியோ கவனம் பெற்றுள்ளது.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த ராட்சத மலைப்பாம்பை, ஷாசியா பர்வீன் என்ற இளம்பெண் துணிச்சலுடன் பிடித்து வெளியேற்றியுள்ளார். பெரிய பாம்பைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்த நிலையில், அவர் அதை லாவகமாகக் கையாண்டுள்ழார் . இந்தக் காட்சிகள் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ராட்சத மலைப்பாம்பு

மொராதாபாத்தில் உள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்புப் பகுதியில் இரவு நேரத்தில் பெரிய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. அப்போது வீடுகளில் இருந்தவர்கள் பாம்பைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து விலகி ஓடியுள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் சிலர் அச்சத்தில் நின்றுள்ளனர்.

இதையும் படிங்க: உட்கார்ந்து இருந்தா ஜோலி முடிந்திருக்கும்...! கழிப்பறை கோமோடிற்குள் கேட்ட உஷ் உஷ் சத்தம்! திறந்து பார்த்த போது சுருண்டு கிடந்த ராட்சத கருநாகம்...! ஷாக் வீடியோ...!!!

துணிச்சலுடன் பாம்பைப் பிடித்த இளம்பெண்

அப்போது அங்கிருந்த ஷாசியா பர்வீன் என்ற இளம்பெண் முன்வந்து மலைப்பாம்பைக் கட்டுப்படுத்திப் பிடித்துள்ளார். பின்னர், அதை குடியிருப்புப் பகுதியில் இருந்து வெளியேற்றியதாகவும், தொடர்ந்து வனப்பகுதியில் விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஷாசியா பர்வீனுக்கு குவியும் பாராட்டு

பெரிய மலைப்பாம்பைக் கண்டு பலரும் அச்சமடைந்த நிலையில், ஷாசியா பர்வீன் காட்டிய துணிச்சலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

 

இதையும் படிங்க: அது எப்படி இப்போ வந்துச்சு...! முதலிரவில் மனைவியை சித்திரவதை செய்த கணவன்! கதறி அழுது வீடியோ வெளியிட்ட புதுமணப்பெண்...! பகீர் பின்னணி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மொராதாபாத் மலைப்பாம்பு #ஷாசியா பர்வீன் #பாம்பு மீட்பு #Moradabad Python Rescue #viral video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story