×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கழுத்தில் இருந்த காயம்! இயற்கை மரணம் என நாடகம் போட்ட மனைவி! வீட்டில் கிடைத்த செல்போனில் சிக்கிய வீடியோ ஆதாரம்... அம்பலமான பார்லர் மனைவி செய்த கேடித்தனம்! பகீர் சம்பவம்...!!!

மீரட்டில் இயற்கை மரணம் என அடக்கம் செய்யப்பட்ட கொத்தனார் தாலிபின் கழுத்தில் காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், மனைவி மற்றும் அவரது காதலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

மீரட்டில் இயற்கை மரணம் என கூறி அடக்கம் செய்யப்பட்ட கொத்தனாரின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கழுத்தில் சந்தேகத்திற்குரிய காயங்கள் இருந்ததை உறவினர்கள் கவனித்த நிலையில், காணாமல் போன செல்போனும் சிக்கியது. அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அவரது மனைவி உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அடக்கம் செய்யும் முன் தெரிந்த சந்தேகக் காயங்கள்

மீரட் லோஹியாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஃபதேல்பூரைச் சேர்ந்தவர் தாலிப் (30). கொத்தனாரான இவர் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். அவரது மனைவி இல்மா (27), தாலிப் இயற்கையான முறையிலேயே உயிரிழந்ததாக குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கொடூர தாக்குதல்! ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கி... நடுரோட்டில் வாலிபரை தடி, கட்டைகளால் அடித்து அராஜகம் செய்த கும்பல்! சுருண்டு கீழே விழுந்து... அதிர்ச்சி வீடியோ....!!!

இதையடுத்து, தாலிபின் உடல் முசாஃபர்நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ஆனால், அடக்கம் செய்வதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை உறவினர்கள் பார்த்தபோது, அவரது கழுத்தில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் மரணம் குறித்து அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

காணாமல் போன செல்போனில் கிடைத்த ஆதாரங்கள்

இதற்கிடையே, அக்டோபர் 2-ம் தேதி தாலிபின் செல்போன் துணிகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது குடும்பத்தினருக்கு கிடைத்தது. அந்த செல்போனை ஆய்வு செய்தபோது, இல்மா மற்றும் அழகு நிலையம் நடத்தி வரும் அமான் இடையேயான அழைப்புப் பதிவுகள் மற்றும் உரையாடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இல்மாவின் வாக்குமூலம் இடம்பெற்றதாக கூறப்படும் வீடியோவும் செல்போனில் இருந்துள்ளது. அதில், சம்பவத்தன்று தாலிபுடன் ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு அமானை அழைத்ததாகவும், அமான் மற்றொருவருடன் வந்து தாலிபை தாக்கியதாகவும் இல்மா கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அமானின் ஆலோசனையின் பேரில் தாலிபின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொலை செய்துவிட்டு, இயற்கை மரணம் போல் காட்டியதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய நடவடிக்கை

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தாலிபின் உறவினர் அளித்த புகாரின் பேரில் லோஹியாநகர் போலீசார் இல்மா மற்றும் அமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மரணத்திற்கான உண்மையான காரணத்தை உறுதி செய்ய, அடக்கம் செய்யப்பட்ட தாலிபின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

சுமார் நான்கு ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த தாலிப்-இல்மா தம்பதிக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது. குடும்ப சூழலில் நடந்ததாக கூறப்படும் இந்த மரணம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், செல்போனில் கிடைத்த தகவல்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை முடிவுகளை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: விடுதி அறையில் 18 வயது கல்லூரி மாணவி உயிரிழப்பு! சாப்பாட்டில் விஷம் வச்சு கொன்னுட்டாங்க... தந்தையின் பரபரப்பு புகார்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மீரட் கொலை #Talib Murder #இல்மா அமான் #Meerut Crime #கொத்தனார் மரணம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story