கள்ளக்காதலிக்காக ராணுவ புருஷன் செய்த கொடூரம்! 7 மாத கர்ப்பிணி மனைவி வழுக்கி விழுந்ததாக போட்ட நாடகம்... இறுதியில் அம்பலமான அதிர்ச்சி உண்மை!!!
மகாராஷ்டிராவில் 7 மாத கர்ப்பிணி மனைவி உயிரிழந்த வழக்கில், கழுத்தில் இருந்த காயத்தழும்புகளின் அடிப்படையில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் 7 மாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது கணவரான ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வழுக்கி விழுந்ததாகக் கூறி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், பெண்ணின் கழுத்தில் இருந்த காயத்தழும்புகள் மருத்துவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. இதையடுத்து போலீசார் விசாரணையைத் தொடங்கியதில், அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழுக்கி விழுந்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதி
வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்த ஞானேஷ்வர் மத்னே, இந்திய ராணுவத்தின் 6-வது மராத்தா பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபாலி மத்னே 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில், தீபாலி வீட்டில் வழுக்கி விழுந்துவிட்டதாக ஞானேஷ்வர் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து தீபாலி முதலில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆனால், அவரது கழுத்தில் காணப்பட்ட தெளிவான காயத்தழும்புகள் மருத்துவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கழுத்தில் இருந்த காயத்தழும்புகள் ஏற்படுத்திய சந்தேகம்
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார், தீபாலியின் உடலைப் பார்வையிட்டு விசாரணையைத் தொடங்கினர். இதற்கிடையே அவரது சகோதரர் ராகுல் மத்னே போலீசில் புகார் அளித்தார். அதில், ராணுவ வீரர் ஞானேஷ்வர் மத்னே மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், இதுதொடர்பாக தனது மனைவியை அவர் அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், தனது சகோதரி இயற்கையாக உயிரிழக்கவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ராகுல் சந்தேகம் தெரிவித்தார். ஞானேஷ்வர் மத்னே மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியிருந்தார்.
கொலை வழக்கில் ராணுவ வீரர் கைது
குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக ஞானேஷ்வர் மத்னே கைது செய்யப்பட்டுள்ளார். கர்ப்பிணி பெண் மரணம் தொடர்பாக அவரது உடலில் காணப்பட்ட காயங்கள், மருத்துவ அறிக்கை மற்றும் தடயவியல் ஆதாரங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாலி உண்மையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டாரா, கொலைக்கான காரணம் என்ன, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ மற்றும் தடயவியல் பரிசோதனைகளின் முடிவுகளுக்குப் பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இப்படி ஒரு நிலைமையா? விளையாடும் வயதில் தண்ணீரிலே வாழ்க்கையை போக்கும் 16 வயது சிறுவன்! மருத்துவ உலகையே மிரள வைக்கும் அரிய நோய்...!!!