கலிகாலம்... பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த கோடரி கொலை! 7 ஏக்கர் நிலத்துக்காக சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர்...! குலை நடுங்கவைக்கும் காட்சி..!!!
மத்தியப் பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் 7 ஏக்கர் நிலப் பங்கைக் கேட்டதால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ராகேஷ் யாதவ் கொலை செய்யப்பட்டார். தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில், நிலத் தகராறு காரணமாக 23 வயது இளைஞர் கோடரியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 17-ஆம் தேதி கோத்ரி கிராமத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்த இந்தத் தாக்குதலில் ராகேஷ் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது உறவினரான லால் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 ஏக்கர் நிலப் பங்கால் குடும்பத்தில் தகராறு
கோத்ரி கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் யாதவ், தனது விதவை சகோதரிக்குச் சேர வேண்டிய 7 ஏக்கர் நிலத்தில் உரிய பங்கைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட பிரச்சனை நாளடைவில் பெரிதாகியுள்ளது.
இதையும் படிங்க: என்னடா மனசு உனக்கு..? நண்பன் கொடுத்த ரசகுல்லா! வாயில் போட்டு கடித்த அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி... பகீர் பின்னணி..!!!
இந்த நிலையில், உறவினர்களான லால் சிங் யதுவன்ஷி மற்றும் அவரது மகன் ஜிதேந்திரா ஆகியோர் ராகேஷைத் தாக்கியுள்ளனர். கோடரியால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலத்த காயமடைந்த ராகேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தந்தை கைது; மகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
கொலை தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து லால் சிங்கை கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த அவரது மகன் ஜிதேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
நிலப் பிரச்சனையே கொலைக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காலம் கெட்டு போச்சு! 7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! கதறும் குடும்பம்... போராட்டத்தில் திரண்ட கிராம மக்கள்...!!!