×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னடா மனசு உனக்கு..? நண்பன் கொடுத்த ரசகுல்லா! வாயில் போட்டு கடித்த அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி... பகீர் பின்னணி..!!!

மத்தியப் பிரதேசம் திண்டோரி மாவட்டத்தில் ரசகுல்லா எனக் கூறி நண்பர் கொடுத்த நாட்டு வெடிகுண்டைக் கடித்த நபர் உயிரிழந்தார். நண்பரைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில், ரசகுல்லா எனக் கூறி நண்பர் கொடுத்த நாட்டு வெடிகுண்டைக் கடித்த நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வராண்டாவில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக நண்பரைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரசகுல்லா எனக் கூறி கொடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு

திண்டோரி மாவட்டம் படாரியா சாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பரௌதியா. இவர் குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, இரவு 8 மணியளவில் வீட்டின் வராண்டாவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர் ராமபகத், ராஜேந்திராவுடன் பேசிக்கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: காலம் கெட்டு போச்சு! 7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! கதறும் குடும்பம்... போராட்டத்தில் திரண்ட கிராம மக்கள்...!!!

அந்த நேரத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டு ஒன்றை, ரசகுல்லா என்று கூறி ராமபகத் அவரிடம் கொடுத்துள்ளார் . அதை உண்மையான இனிப்பு என நம்பிய ராஜேந்திரா வாயில் போட்டு கடித்துள்ளார்.

வாயில் வெடித்ததால் உயிரிழப்பு

ராஜேந்திரா கடித்ததும் அந்தப் பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் அவரது வாயில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நண்பர் கைது; போலீசார் விசாரணை

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ராமபகத்தைக் கைது செய்துள்ளனர். அவர் எதற்காக வெடிபொருளை இனிப்பு எனக் கூறிக் கொடுத்தார், இது திட்டமிட்டு செய்யப்பட்டதா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: அதிர்ச்சி..! ஓடும் காரில் 20 வயது இளம்பெண்ணுக்கு 2 மணி நேரமாக நடந்த கொடூரம்...! கதறி துடித்தும் விடாத கொடுமை... நடுங்க வைக்கும் நள்ளிரவு சம்பவம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#திண்டோரி மரணம் #நாட்டு வெடிகுண்டு #ராஜேந்திர பரௌதியா #Madhya Pradesh crime #Rasgulla Explosive Case
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story