சின்ன குழந்தைடா.. 3-ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி கழிவறையில் பாலியல் தொல்லை! சத்தம் போட விடாமல் வாயை பொத்தி தூய்மை பணியாளரின் செய்த கொடூரம்...!!!
பெங்களூரு கனகபுரா தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தூய்மை பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி கழிவறையில் மாணவி இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் கனகபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழிவறையில் மாணவிக்கு தொல்லை
பள்ளியில் படித்து வரும் சிறுமி வழக்கம்போல் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு சுத்தப்படுத்தும் பணியில் இருந்த தூய்மை பணியாளர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஷோரூம் வாசலில் குடித்துவிட்டு பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்ட கும்பல்! எல்லை மீறி செய்த அட்டூழியம்...! பகீர் வீடியோ..!!!
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட முயன்றுள்ளார். ஆனால், அந்த நபர் உடனடியாக அவரது வாயைப் பொத்தியதாக கூறப்படுகிறது. மேலும், நடந்ததை வெளியில் தெரிவித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிறுமியை மிரட்டியதாகவும் போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெற்றோரிடம் தெரிவித்த மாணவி
பின்னர் வீட்டுக்குச் சென்ற மாணவி, நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் கனகபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்ற போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
தூய்மை பணியாளர் கைது
புகாரின் அடிப்படையில் பள்ளி கழிவறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி நிர்வாகத்திடமும் போலீசார் விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உஷாரா இருங்க மக்களே..! ரயில் பயணத்தில் குடிக்கும் தண்ணீரில் மறைந்திருக்கும் உயிரைக் குடிக்கும் கொடூரச் சதி..!ஷாக் வீடியோ...!!!