ஷோரூம் வாசலில் குடித்துவிட்டு பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்ட கும்பல்! எல்லை மீறி செய்த அட்டூழியம்...! பகீர் வீடியோ..!!!
பெங்களூரு கே.ஆர்.புரம் யுனிலைட் எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில் மது, கஞ்சா போதையில் கும்பல் ஊழியர்களை தாக்கி கண்ணாடிகளை சேதப்படுத்த முயன்றது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள யுனிலைட் எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமுக்குள் புகுந்த போதை கும்பல், ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே செவ்வாய்க்கிழமை மாலை நடந்த இந்த ரகளையில், பெண் ஊழியர் ஒருவர் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தள்ளுபடி கேட்டு தொடங்கிய தகராறு
தகவலின்படி, அந்த கும்பல் காலை முதலே ஷோரூமுக்கு வந்து தொலைக்காட்சி பெட்டியின் விலையை குறைத்து தருமாறு ஊழியர்களிடம் வலியுறுத்தியுள்ளது. அதற்கு ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர்கள், ஷோரூம் வாசல் பகுதியிலேயே அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
மாலையில் மீண்டும் ஷோரூமுக்குள் சென்ற கும்பல், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், திடீரென தாக்குதலிலும் இறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் ஒருவரை படிக்கட்டில் இருந்து கீழே தள்ளியதாகவும், பின்னர் அவரை தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கண்ணாடிகளை உடைக்க முயன்ற கும்பல்
இதுமட்டுமின்றி, ஷோரூமின் பிரம்மாண்ட கண்ணாடிகளை பெரிய கற்களை வீசி சேதப்படுத்தவும் அந்த கும்பல் முயன்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் சிலர் நடந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்தனர்.
வழக்குப்பதிவு செய்து தேடும் போலீசார்
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, கே.ஆர்.புரம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஷோரூமில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் போதை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இப்போ தாண்டா எனக்கு நிம்மதி... 4 மாத கர்ப்பிணி தங்கையை கொன்ற கணவரை... 7 மாதங்களுக்கு பிறகு தீர்த்து கட்டிய அண்ணன்! பகீர் சம்பவம்..!!!