குளிக்க வந்தா அந்த வேலைய மட்டும் பாக்கணும்! இது தேவையா! தியானம் செய்து கொண்டிருந்த துறவி! இளைஞர்கள் செய்த செயலால் கடுப்பாகி வெறியோடு.... வைரலாகும் வீடியோ!
எதுக்கு இப்படிலாம் பண்ணனும்! தியானம் செய்து கொண்டிருந்த துறவி! இளைஞர்கள் செய்த செயலால் வெறியோடு ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம்! வைரலாகும் வீடியோ...
ஜெய்ப்பூரில் ஹாதினி குண்ட் நீர்வீழ்ச்சியில் தியானத்தில் இருந்த ஜடாதாரி துறவி ஒரு குழு இளைஞர்களை குச்சியால் விரட்டி அடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பவம் ஜெய்ப்பூர் ஹாதினி குண்ட் பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆசிரமத்தில் நடைபெற்றது.
அங்கு தியானம் செய்து கொண்டிருந்த துறவியின் அமைதியை, குளிக்க வந்த இளைஞர்கள் சத்தமிட்டு கெடுத்ததாக கூறப்படுகிறது. துறவி முதலில் அமைதியாக எச்சரித்தாலும், இளைஞர்கள் அதை கண்டுகொள்ளாமல் சிரிப்பு, கூச்சல், சைகைகள் மூலம் தொடர்ந்து தொந்தரவு செய்தனர். இதனால் கோபமடைந்த துறவி, ஒரு குச்சியை எடுத்து அவர்களை விரட்டியடித்தார்.
இந்த வீடியோவில், ஒரு இளைஞருடன் நேரடியாக தகராறு மற்றும் ஒருவரை குழியில் தூக்கி எறியும் காட்சி இடம் பெற்றுள்ளது. வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, துறவியின் தன்னிகரற்ற தற்காப்பு திறனை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், ஆன்மீக தியான வாழ்க்கையில் தொந்தரவு ஏற்படுத்திய இளைஞர்களின் ஒழுங்கற்ற நடத்தைக்கு எதிராக சமூக வலைதள வாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம், ஆன்மீக நிலைகளை மதிக்க வேண்டிய அவசியத்தையும், ஒழுக்கத்தை கடைபிடிக்கும் முக்கியத்துவத்தையும் நமக்குப் புரிய வைக்கிறது.
இதையும் படிங்க: இப்படி கூட நடக்குமா! நம்பவே முடியல... 20 ஆண்டுகளாக காது கேட்காமல் இருந்த பெண்! பல் சிகிச்சைக்கு பிறகு நடந்த அதிசயம்! வியக்க வைக்கும் சம்பவம்...