நடுரோட்டில் கொதிக்க கொதிக்க சுடுநீர் உடம்பெல்லாம் கொட்டி... போலீசார் தள்ளியதால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்..! பரபரப்பு வீடியோ..!!!
ஜெய்ப்பூரில் முதலமைச்சர் வாகனப் பேரணிக்கு முன் சாலையோர கடையை அகற்றியபோது கொதிக்கும் நீர் உடலில் கொட்டி இளம்பெண் தீக்காயமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் முதலமைச்சரின் வாகனப் பேரணி செல்லவிருந்த நிலையில், சாலையோர கடைகளை அகற்ற போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இளம் பெண் ஒருவர் தீக்காயமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடையை அகற்றியபோது ஏற்பட்ட பரபரப்பு
ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் உள்ள அக்ஷய பாத்ரா கோவில் அருகே ரேஷு குப்தா மோமோஸ் வண்டி கடை நடத்தி வந்தார். கடந்த ஜூன் 19-ம் தேதி மாலை 6.45 மணியளவில் முதலமைச்சரின் வாகனப் பேரணி அந்த வழியாக செல்ல இருந்ததால், சாலையோர கடைகளை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது ரேஷு மோமோஸ் தயாரிப்பதற்காக பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பயங்கர கேடி போல.... உள்ளாடை கடையில் 3 பெண்கள் செய்த அசிங்கம்! சிசிடிவியில் சிக்கிய அந்த ஒரு காட்சியின் அதிர்ச்சி வீடியோ !!!
போலீசார் வண்டியை உடனடியாக அகற்றுமாறு கூறியபோது, பாத்திரத்தில் கொதிக்கும் நீர் இருப்பதால் சிறிது நேரம் அவகாசம் தருமாறு ரேஷு கேட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் வண்டியை பலவந்தமாகத் தள்ளியதால், கொதிக்கும் நீர் தோள், மார்பு மற்றும் தொடை உள்ளிட்ட உடல் பகுதிகளில் கொட்டி பலத்த தீக்காயம் ஏற்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குடும்பத்தின் புகார் மற்றும் பின்னணி
இந்த விவகாரம் தொடர்பாக ரேஷுவின் சகோதரி ஜூன் 22-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த இவர்களின் குடும்பம், 2020-ல் தந்தையை கொரோனா தொற்றால் இழந்ததாகவும், பின்னர் 2022-ல் ஜெய்ப்பூருக்கு குடிபெயர்ந்து குடும்பச் செலவுக்காக மோமோஸ் விற்பனை செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
சம்பவம் குறித்து இரு தரப்பினரும் மாறுபட்ட விளக்கங்களை அளித்து வரும் நிலையில், ராமநகரியா காவல் நிலைய பொறுப்பாளர் சந்திரபான் சிங், கொதிக்கும் நீர் கொட்டிய விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கோவர்தன் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிழக்கு மண்டல டிசிபி ரஞ்சிதா சர்மா தெரிவித்துள்ளார்.