செருப்பு மாலை அணிவித்து அரை நிர்வாணமாக பெண்ணை ஊர்வலம்! இப்படி ஒரு கொடுமையால் கொந்தளிக்கும் பொதுமக்கள்.... வீடியோ வைரலானதும் அதிரடி காட்டிய போலீஸ்...!!!
மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகரில் கோவில் நுழைவுரிமை தகராறில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் உல்ஹாஸ்நகரில் கோவில் நுழைவுரிமை தொடர்பாக ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவர் தாக்கப்பட்டு அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
கோவில் நுழைவுரிமை தகராறில் வன்முறை
தகவலின்படி, உல்ஹாஸ்நகர் பகுதியில் உள்ள கோவிலில் நுழைவதற்கான உரிமை தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையே நீண்டநாளாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கடும் மோதலாக மாறியுள்ளது.
அப்போது பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டதுடன், அவரை அரை நிர்வாணமாக்கி செருப்பு மாலை அணிவித்து தெருவில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அவரது தலைமுடியும் வெட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரலான வீடியோ... போலீஸ் அதிரடி
பாதிக்கப்பட்ட பெண் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, உல்ஹாஸ்நகர் வித்தல் வாடி காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணியும் தொடங்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து பேசிய உதவி காவல் ஆணையர் ஷைலேஷ் காலே, இரு குடும்பங்களுக்கு இடையேயான மோதலே இந்த வன்முறை சம்பவத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளார். மேலும், ஏழு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தொடரும் விசாரணை
சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகிறது. அதேசமயம், சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ ஆதாரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தகாத வார்த்தைகளை தாங்க முடியாமல் எதிர்த்து பேசிய பெண்! நிமிடத்தில் அரங்கேறிய அட்டூழியம்..... அதிர்ச்சி சிசிடிவி வீடியோ!!!