காலம் கெட்டுப்போச்சு...நடுரோட்டில் டிரெஸ்ஸை கழட்டி எரிந்த இளம்பெண்! கார் ஓட்டுநரை ஓட ஓட விரட்டி... அத்துமீறிய போதையா? இளம்பெண்ணின் அட்டுழீய வீடியோ..!!!!
ஜெய்ப்பூரின் மால்வியா நகரில் இளம் பெண் ஒருவர் சாலையில் ஆவேசமாக நடந்து கொண்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் பரபரப்பான மால்வியா நகர் பகுதியில் இளம் பெண் ஒருவர் பொதுமக்கள் மத்தியில் ஆவேசமாக நடந்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. வணிக வளாகங்கள் நிறைந்த அந்தப் பகுதியில் ஏற்பட்ட இந்த பரபரப்பால் சில நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் ஓட்டுநருடன் திடீர் மோதல்
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்தப் பெண், நண்பர்களுடன் ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்திருந்ததாக கூறப்படுகிறது. ஜூன் 9-ஆம் தேதி காலை, அவர் பயணித்த வாடகை காரில் இருந்து கௌரவ் டவர் அருகே இறங்கியபோது, கார் ஓட்டுநருடன் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த பெண் ஓட்டுநரை தாக்கியதுடன், காரின் கண்ணாடிகளையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளார்.
பொதுமக்கள் மீது செங்கற்கள் வீச்சு
அதன்பின், சாலையோரத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை நோக்கி அவர் சத்தமிட்டபடி நடந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அருகில் கிடந்த செங்கற்களை எடுத்து வீசியதால் அந்தப் பகுதியில் சில நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
இதனால் மக்கள் அங்கிருந்து விலகிச் சென்றதுடன், வாகன போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வைரல் வீடியோ காட்சிகளும் இந்த நிகழ்வை பரவலாக பேசுபொருளாக்கின.
போலீசார் நடவடிக்கை மற்றும் விசாரணை
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்தப் பெண்ணை கட்டுப்படுத்தி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அடுத்த நாள் அவர் அளித்த விளக்கத்தில், தன்னிடம் யாரும் தவறாக நடக்கவில்லை என்றும், மருத்துவப் பரிசோதனை தேவையில்லை என்றும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஓட்டுநர் அல்லது பொதுமக்கள் யாரும் அதிகாரப்பூர்வ புகார் அளிக்காததால், ஜூன் 10-ஆம் தேதி அவர் சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், பொது இடத்தில் நடந்துகொண்ட விதம் தொடர்பாக கிடைத்துள்ள வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் மேலதிக விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.