×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிங்கம் என்ற அச்சத்தில் தொடங்கிய 24 மணி நேர தேடுதல் வேட்டை! டிரோன்கள், 70 கமாண்டோக்கள்..! இறுதியில் அதிகாரிகளுக்கு காத்திருந்த ட்விஸ்ட்..!!!

துருக்கி இஸ்தான்புல் புறநகரில் சிங்கம் சுற்றித் திரிவதாக எழுந்த அச்சம், சிசிடிவி ஆய்வில் அது பெரிய நாயாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

துருக்கியின் இஸ்தான்புல் நகரின் புறநகர்ப் பகுதியில் பெண் சிங்கம் ஒன்று சுற்றித் திரிவதாக வெளியான தகவல் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கடந்த 22-ம் தேதி மாலை, நகரின் வடக்கே உள்ள சாரியர் மாவட்டத்தின் உஸ்கும்ருகோய் குடியிருப்புப் பகுதியில் சிங்கம் போன்ற விலங்கு நடமாடுவதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து, விலங்கைக் கண்டறிய போலீசார் மற்றும் வனவிலங்கு நிபுணர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

70-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர தேடுதல்

சிங்கம் நடமாடுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். மேலும், அருகிலுள்ள பெல்கிரேட் காடு தற்காலிகமாக மூடப்பட்டது. 70-க்கும் மேற்பட்ட போலீசார், ராணுவ கமாண்டோக்கள் மற்றும் வனவிலங்கு நிபுணர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். டிரோன்கள் மூலமும் விலங்கைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிங்க: எப்போ என்ன நடக்குமோ..? பஸ் ஸ்டேன்டில் பேருந்துக்காகக் காத்திருந்த மாணவர்கள் மீது... லாரி மோதி 2 பேர் பரிதாப பலி! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி...!!!

வசதி படைத்தவர்கள் வீடுகளில் சட்டவிரோதமாக சிங்கத்தை வளர்த்து வந்திருக்கலாம் என்றும், அங்கிருந்து விலங்கு தப்பியிருக்க வாய்ப்புள்ளதாகவும் சந்தேகம் எழுந்தது. இதனால், சிங்கத்தின் உரிமையாளரை அடையாளம் காண அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியது.

சிங்கம் இல்லை.. பெரிய நாயாக இருக்கலாம்!

சுமார் 24 மணி நேரம் நீடித்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு, இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. வெவ்வேறு கோணங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், தேடப்பட்ட விலங்கு சிங்கமோ அல்லது வேறு பெரிய பூனை இனத்தைச் சேர்ந்த விலங்கோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சிங்கம் என நினைத்துத் தேடப்பட்ட விலங்கு ஒரு பெரிய நாயாக இருக்கலாம் என பலரும் கருதுகின்றனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில் வீட்டுப் பூனைகளின் வீடியோக்களைப் பகிர்ந்து, 'இதுதான் அந்தச் சிங்கமா?' என பயனர்கள் நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிங்கம் என்ற அச்சத்தில் தொடங்கிய தேடுதல் வேட்டை, தற்போது சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: தன்னை தானே சோதித்து கொள்ள கிடைத்த வாய்ப்பு! வங்கியில் தவறுதலாகக் கிடைத்த ரூ.20,000 பணம்..! திருப்பிக் கொடுக்க வந்தவருக்குக் காத்திருந்த ட்விஸ்ட்.. நெகிழ வைக்கும் சம்பவம்..!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#இஸ்தான்புல் சிங்கம் #Turkey Lion Search #சாரியர் மாவட்டம் #CCTV காட்சிகள் #Istanbul Viral News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story