எப்போ என்ன நடக்குமோ..? பஸ் ஸ்டேன்டில் பேருந்துக்காகக் காத்திருந்த மாணவர்கள் மீது... லாரி மோதி 2 பேர் பரிதாப பலி! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி...!!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்கள் மீது ஐஷர் டெம்போ மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த ஐஷர் டெம்போ மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், 3 மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மீது வாகனம் மோதிய பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்கள் மீது மோதல்
புனேவின் போப்தேவ் காட் பகுதியில் மாணவர்கள் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அதிவேகமாக வந்த ஐஷர் டெம்போ கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இதில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
இதையும் படிங்க: ஒரு நொடியில ஒரு உயிர் போச்சே! கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்! 18 வயது இளைஞர் பரிதாப பலி... பகீர் சிசிடிவி காட்சி..!!!
மருத்துவமனையில் 3 மாணவர்களுக்கு சிகிச்சை
விபத்தில் காயமடைந்த மாணவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாகனம் மோதியதில் மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்ட உடைமைகள் சாலையில் சிதறின. இதையடுத்து, அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மீட்புப் பணிகளில் உதவினர்.
சிசிடிவியில் பதிவான விபத்து காட்சிகள்
விபத்து தொடர்பான முழு காட்சிகளும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போக்குவரத்தைச் சீரமைத்ததுடன் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.