இந்திய ஆண்களே உஷார்.. 30% வேகமாக பரவுகிறது.. முக்கிய எச்சரிக்கை.. தப்பிச்சுக்கோங்க.!
Prostate Cancer India: ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்துள்ளது.
லான்செட் மருத்துவ ஆய்வறிக்கையின்படி இந்திய ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
30% உயர்வு:
உலகளவில் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இருக்கும் இந்தியாவில், ஆண்களிடையே புரோஸ்டேட் புற்றுநோய் அதிகம் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் நகரமயமாக்கல், வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், உடல் உழைப்பில்லாத பழக்கம், குறைந்த உடலியல் செயல்பாடு, சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவு, மதுபான பழக்கம் போன்றவற்றால் இந்த பாதிப்பு சுமார் 30% வரை அதிகரித்து இருக்கிறது.
இதையும் படிங்க: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி.. ரூ.90,000ஐ நெருங்குகிறது.!
ஆண்களுக்கு அதிர்ச்சி:
தேசிய அளவில் புரோஸ்டேட் புற்றுநோய் இந்திய ஆண்களுக்கு ஏற்படும் மூன்றாவது பொதுவான புற்றுநோயாக இருக்கிறது. இத நோய் டெல்லி, கொல்கத்தா, புனே, திருவனந்தபுரம் ஆகிய நகர்ப்புறங்களில் அதிகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்களை பாதிக்கும் முதல் 10 வகையான புற்றுநோயில், புரோஸ்டேட் புற்றுநோயும் இடம்பெற்றுள்ளது. கடந்த 1990களில் மும்பையில் ஆண்களிடம் எட்டாவது பொதுவான புற்றுநோயாக இருந்தது, 2014ல் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருந்தது.
புரோஸ்டேட்:
புரோஸ்டேட் என்பது ஆணின் இனப்பெருக்க அமைப்பின் பகுதி ஆகும். இது சிறுநீர்ப்பைக்கு அடியில் வாலாட்ட அளவில் இருந்து வயத்தைப்பொறுத்து மாறுபடும் தன்மை கொண்டது. ஒரு நபரின் உணவு பழக்கவழக்கம், கொழுப்பு உணவுகள், புகைப்பழக்கம், மதுபானம் அருந்துதல் போன்றவற்றுடன் இது நேரடி தொடர்புகொண்டது. புரோஸ்டேட் புற்றுநோய் வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவில் சிறுநீர் மெதுவாக வெளியேறுதல், சிறுநீர் & விந்தில் ரத்தம், சிறுநீர் தானே வெளியேறுதல், எலும்பு முறிதல், விறைப்புத்தன்மை குறைபாடு, கீழ் முதுகு & இடுப்பெலும்பு வலி, எலும்புகளில் வலி இருக்கும்.
இதையும் படிங்க: மாரடைப்பு எப்போது, எப்படி வருகிறது? ஒரு வருடத்திற்கு முன்பே வரும் முக்கிய நான்கு அறிகுறிகள்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க...