மூர்க்கத்தனமாக தாக்கிய மாடு; துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.. அதிர்ச்சி காட்சிகள்.!
மூர்க்கத்தனமாக தாக்கிய மாடு; துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.. அதிர்ச்சி காட்சிகள்.!

உறவினர் வீட்டுக்கு சென்று வந்தவர் மாடு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
மாடு முட்டியது:
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சர்தார் கொட்வாலி பகுதியில் வசித்து வருபவர் சுசில் பாஜ்பாய் (வயது 42). சம்பவத்தன்று இவர் அங்குள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். பின் உறவினரான இளைஞர் ஒருவருடன் அவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: 3 நாட்களாக உன் வீட்டுல என்ன வேலை? கள்ளக்காதல் ஜோடியை கம்பத்தில் கட்டிவைத்து கவனித்த பொதுமக்கள்..!
படுகாயம்:
அப்போது தெருவில் சுற்றித்திரிந்த காளை மாடு ஒன்று திடீரென சுசிலை கொம்பால் முட்டி தூக்கி வீசியது. மேலும் அவரை கடுமையாக தொடர்ந்து தாக்கியது. இதனால் சுசிலுடன் வந்த இளைஞர் காளையை விரட்ட முயற்சித்தும் பலன் இல்லை.
வீடியோ வைரல்:
முதலில் கொம்பால் முட்டி தூக்கி காலால் மிதித்த காளை, பின் மீண்டும் பக்கவாட்டில் மோதியதில் சுசில் அங்குள்ள சுவற்றின் மீது மோதி படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தில் சில நிமிட போராட்டங்களுக்கு பின்னர் அக்கம்பக்கத்தினரால் காளை விரட்டப்பட்டது.
காளைமாடு தாக்கியதில் படுகாயமடைந்த சுசில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பதறவைக்கும் காட்சிகள்:
இதையும் படிங்க: "என் பொண்டாட்டி ஓடிப் போயிட்டா".. கண்டுபிடித்து தந்தால் சன்மானம்.. விரக்தியில் அறிவிப்பு வெளியிட்ட கணவன்.!