ஐயோ... பாவம்! இரவு முழுவதும் வலியோடு வாயில் நுரை தள்ள துடிதுடித்த நாய்! அதிகாரிகளின் அலட்சியம்…. கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!!
ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் ட்ராலியின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்த நாயை மீட்க நடவடிக்கை எடுக்கப்படாததால், பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ட்ராலியின் அடியில் சிக்கிய நாய் ஒன்று பலத்த காயங்களுடன் தவித்து வருகிறது. நேற்று இரவு முதல் வெளியே வர முடியாமல் பசியிலும் வலியிலும் அந்த நாய் போராடி வருவதாக கூறப்படுகிறது. தகவல் அளித்தும் மீட்புக் குழுவினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ட்ராலியின் அடியில் சிக்கிய நாய்
பஞ்சாரா ஹில்ஸ் ரோட் எண் 10-ல் உள்ள ஐபிஎஸ் குடியிருப்புகள் அருகே ட்ராலி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அதன் அடியில் நுழைந்த நாய், பின்னர் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டது. காயம் காரணமாக அசைய முடியாத நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தலைமை ஆசிரியை கொடூர கொலை.. மாணவர்கள் அரங்கேற்றிய வெறிச்செயல்.. காரணம் என்ன?
தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என புகார்
நாயின் நிலையை பார்த்த ட்ராலி ஓட்டுநர், உடனடியாக GHMC நாய்கள் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் தரப்பில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதனால் நாயின் உடல்நிலை மேலும் மோசமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
இதற்கிடையில், நாய் சிக்கியிருப்பது தொடர்பான தகவலும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியதால் விவகாரம் கவனம் பெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நாயை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: என்ன மனுஷன் நீ ? காதலனின் உயிரைக் காப்பாற்ற கிட்னியே கொடுத்த காதலி! பதிலுக்கு காதலிக்கு கிடைத்த பேரதிர்ச்சி... கொடூர சம்பவம்!!!