×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஹோட்டல் அறையில் போர்வை சுத்தியப்படி காதில் போனுடன் கிடந்த உருவம்... ! 4 நாட்கள் தங்கிவிட்டுச் சென்ற நபர் செய்த காரியம்! இறுதியில் நடந்த பெரிய ட்விஸ்ட்..!!!

ஹோட்டல் அறையைச் சுத்தம் செய்யச் சென்ற ஊழியர்கள் போர்வைக்குள் மனித சடலம் இருப்பதாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நடந்த ஆய்வில் உண்மை தெரியவந்தது.

Advertisement

ஹோட்டலில் அறையை காலி செய்துவிட்டு சென்ற வாடிக்கையாளர், ஊழியர்களை பயமுறுத்தும் வகையில் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறையைச் சுத்தம் செய்யச் சென்ற ஊழியர்கள், போர்வைக்குள் மனித சடலம் இருப்பதாக நினைத்து அதிர்ச்சியடைந்தனர். காதருகே செல்போனும் வைக்கப்பட்டிருந்ததால் பதற்றம் மேலும் அதிகரித்தது.

போர்வைக்குள் கிடந்த ‘சடலம்’

சுமார் 2 முதல் 4 நாட்கள் வரை ஹோட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளர் ஒருவர் Check-out செய்து கிளம்பினார். அதன்பின் வழக்கம்போல் அறையைச் சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் உள்ளே சென்றனர். அப்போது கட்டிலில் போர்வைக்கு நடுவே ஒருவர் படுத்திருப்பது போன்ற உருவம் தென்பட்டது.

இதையும் படிங்க: இப்படியா நடக்கணும்....! காது சியாம்ஜி தரிசனம் முடிந்து சொந்த ஊருக்கு திரும்பியபோது நேர்ந்த விபத்து! காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பலி.... பகீர் வீடியோ!!!

அதிலும் அந்த உருவத்தின் காதுக்கு அருகே செல்போன் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஊழியர்கள், யாரோ கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதாக நினைத்தனர். ஹோட்டல் ஊழியர்கள் அலறியபடி வெளியே ஓடி, மேனேஜர் மற்றும் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தனர்.

ஆய்வில் தெரிந்த உண்மை

தகவல் பரவியதும் ஹோட்டல் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அச்சத்துடன் அருகில் சென்று அந்த உருவத்தை கவனமாகச் சோதித்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அது மனித சடலம் அல்ல என்பது உறுதியானது.

தலையணைகள் உள்ளிட்ட பொருட்களை மனித உடல் போல அடுக்கி வைத்து, அதன் மேல் போர்வையைப் போர்த்தி அந்த உருவம் உருவாக்கப்பட்டிருந்தது. அறையை காலி செய்வதற்கு முன்பு ஊழியர்களை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக வாடிக்கையாளர் திட்டமிட்டு இந்த வேலையை செய்துவிட்டுச் சென்றது தெரியவந்தது. இந்த ஹோட்டல் பிராங்க் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

 

இதையும் படிங்க: அடக்கடவுளே... ஆக்சிஜன் மாஸ்க்குடன் குழந்தையை மடியில் வைத்து திணறும் தந்தை! மரண போராட்டத்தில் பிஞ்சு குழந்தை.... உதவி கேட்டு கதறும் தாய்! அதிர்ச்சி வீடியோ....!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஹோட்டல் ஊழியர்கள் #Hotel Prank #மனித சடலம் #Check-out #ஹோட்டல் அறை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story