தேனிலவுக்கு சென்ற புதுமணத் தம்பதி.. பார்பிகியூ சமைத்தபோது புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
தேனிலவுக்கு சென்ற புதுமணத் தம்பதி.. பார்பிகியூ சமைத்தபோது புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங் அருகே உள்ள சித்தோங் பகுதியில், தேனிலவுக்காக சென்ற புதுமணத் தம்பதிக்கு அதிர்ச்சி சம்பவம் நேர்ந்துள்ளது. அங்குள்ள ஹோம்பேக்கில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் புதுப்பெண் நிகிதா பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் சோப்ரா பகுதியைச் சேர்ந்த அந்தத் தம்பதி, தேனிலவை கழிப்பதற்காக சித்தோங் பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள ஹோம்பேக்கில் தங்கியிருந்த நிலையில், பால்கனியில் பார்பிகியூ முறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக தீ கட்டுப்பாட்டை இழந்து வேகமாகப் பரவியதாக கூறப்படுகிறது. இதில் நிகிதாவின் உடலில் தீப்பற்றியதால், அவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானார். சம்பவம் தொடர்பாக அவரது கணவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிச்சை தர மறுத்த பெண்.. மூக்கை குறிவைத்த மர்ம நபர்.. புதருக்குள் தள்ளி கொடூர சம்பவம்!
தீப்பற்றிய நிலையில் நிகிதா உதவிக்காக அலறியபோதும், ஹோம்பேக் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் உடனடியாக உதவ முன்வரவில்லை என்றும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், ஹோம்பேக் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரணையைத் தொடங்கினர். மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேறொரு ஆணுடன் பேசியதாக சந்தேகம்.. தூங்கிக் கொண்டிருந்த மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்!