×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிச்சை தர மறுத்த பெண்.. மூக்கை குறிவைத்த மர்ம நபர்.. புதருக்குள் தள்ளி கொடூர சம்பவம்!

பிச்சை தர மறுத்த பெண்.. மூக்கை குறிவைத்த மர்ம நபர்.. புதருக்குள் தள்ளி கொடூர சம்பவம்!

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், பிச்சை தர மறுத்த பெண்ணை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மும்பையைச் சேர்ந்த மோனிகா என்ற பெண் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை அணுகிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மோனிகா பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், மோனிகாவை அருகில் இருந்த புதருக்குள் பலவந்தமாகத் தள்ளியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது கழுத்தை நெரித்ததுடன், முகத்தில் கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், அவரது மூக்கில் கடித்து காயப்படுத்தியதுடன், அணிந்திருந்த தங்க மூக்குத்தியையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: போய் செத்துத் தொலை.. கணவன் சொன்ன வார்த்தையால் விபரீத முடிவு.. 14 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீண்ட பெண்!

தாக்குதலில் பலத்த காயமடைந்த மோனிகாவை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகமும் விசாரணையில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் காதலன்.. விடிந்ததும் கணவன்! ஒரே இரவில் மாறிய இளம் ஜோடியின் வாழ்க்கை!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#UttarPradesh #Women nose #bite #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story