விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீர் மாயம்.. அறையில் கேட்ட அழுகை சத்தம்.. பஞ்சாப்பில் அதிர்ச்சி!
விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீர் மாயம்.. அறையில் கேட்ட அழுகை சத்தம்.. பஞ்சாப்பில் அதிர்ச்சி!
பஞ்சாப் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் பேசிய அந்த நபர், இனிப்புகள் வாங்கித் தருவதாகக் கூறி அவரை தனது அறைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அறைக்குள் வைத்து சிறுமிக்கு ஆபாச படங்களை காண்பித்து பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது சந்தேகத்திற்குரிய நபரின் அறையில் இருந்து சிறுமியின் அழுகை சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கதவைத் திறந்து உள்ளே சென்ற அவர்கள், சிறுமியை மீட்டனர். மேலும், அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்.. உறவினர் என நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான நபரை கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போக்ஸோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை தனியாக அழைத்துச் சென்றது, அறைக்குள் நடந்த சம்பவம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்.. உறவினர் என நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!