×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்.. உறவினர் என நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்.. உறவினர் என நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Advertisement

பஞ்சாப் மாநிலத்தில், திருமணமான பெண் ஒருவரை அவரது அக்காவின் கணவர் தனது நண்பருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் திருமணமான பெண் ஒருவரை நேரில் சந்திக்க வேண்டும் எனக் கூறி அவரது அக்காவின் கணவர் அழைத்துள்ளார். நெருங்கிய உறவினர் என்பதால் அவரை நம்பி சந்திக்கச் சென்ற அந்தப் பெண்ணை, அவர் தனது நண்பருடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் இருவரும் அந்தப் பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: சிறுவனிடம் அத்துமீறிய முத்தம்.. இளம்பெண் மீது பாய்ந்த வழக்கு!

இதனையடுத்து காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அக்காவின் கணவர் மற்றும் அவரது நண்பரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சொந்த உறவினர் ஒருவரே நம்பிக்கையை பயன்படுத்தி இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆசை வார்த்தையில் சிக்கிய 15 வயது சிறுமி… கெஸ்ட் ஹவுஸில் நடந்தது என்ன?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#punjab #harassment #sexual abuse
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story