×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எப்படியெல்லாம் எமன் வருது பாருங்க! அம்மா என்ன காப்பாத்து... நொடியில் செங்கல் டிராக்டர் லாரி கவிழ்ந்து... 5 வயது சிறுமி துடிதுடித்து பலி! நெஞ்சை உலுக்கும் காட்சி..!!!

காசியாபாத் அர்தலா பகுதியில் செங்கல் ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி கவிழ்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழந்தார். அவரது தாய் படுகாயமடைந்தார்.

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த சிறுமி, செங்கல் ஏற்றிச் சென்ற டிராக்டர்-டிராலி கவிழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். அர்தலா பகுதியில் பாலாஜி விஹார் அருகே இந்த கோர விபத்து நடந்தது. சிறுமியுடன் சென்ற அவரது தாயும் படுகாயமடைந்தார். நடந்த காட்சிகள் அப்பகுதி சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன.

மண் குவியலில் ஏறிய டிராலி

உயிரிழந்த சிறுமி இனாயா, எல்.கே.ஜி. படித்து வந்தார். பாட்டி வீட்டில் தங்கியிருந்த அவர், தாய் சுல்தானாவுடன் நடைபாதையில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிக அளவு செங்கற்களை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர்-டிராலி, சாலையில் கொட்டப்பட்டிருந்த மண் குவியலின் மீது திடீரென ஏறியது.

இதையும் படிங்க: அடப்பாவி... உன்னோட தப்புக்கு அந்த பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சு! புதுப்பெண்ணுக்கு நொடியில் நேர்ந்த கொடூரம்....! 10 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை! நெஞ்சை நடுங்கவைக்கும் CCTV வீடியோ...!!!

இதனால் டிராலி நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரமாக சென்றுகொண்டிருந்த தாய், மகள் இருவர் மீதும் பக்கவாட்டில் கவிழ்ந்தது. டிராலியில் இருந்த செங்கற்கள் அனைத்தும் அவர்கள் மீது விழுந்ததால் இருவரும் அதன் அடியில் சிக்கினர்.

சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

செங்கற்களுக்கு அடியில் சிக்கிய இனாயா, பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சுல்தானாவை மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பான டிராக்டர் டிராலி விபத்து காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

இதையும் படிங்க: மக்களே உஷார்! திடீரென ஓடிக்கொண்டிருந்த மின்சார ஸ்கூட்டர் வெடித்து... தீப்பிடித்து எரிந்தது! நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#காசியாபாத் விபத்து #Ghaziabad Accident #டிராக்டர் டிராலி #School Girl Death #CCTV Footage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story