×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடப்பாவி... உன்னோட தப்புக்கு அந்த பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சு! புதுப்பெண்ணுக்கு நொடியில் நேர்ந்த கொடூரம்....! 10 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை! நெஞ்சை நடுங்கவைக்கும் CCTV வீடியோ...!!!

குஜராத்தில் கார்பா வகுப்பை முடித்து வீடு திரும்பிய புதுமணப்பெண் மீது அதிவேக பைக் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

குஜராத்தில் கார்பா வகுப்பை முடித்துவிட்டு தனித்தனி இருசக்கர வாகனங்களில் வீடு திரும்பிய புதுமண தம்பதிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஷிலாஜ் டி.பி.எஸ். கால்வாய் சாலையில் உள்ள மாதவ் அத்வேத் வளாகம் அருகே, அதிவேகமாக வந்த பைக் பெண் ஓட்டி வந்த ஆக்சஸ் வாகனத்தின் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

10 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பெண்

செப்டம்பர் 11-ம் தேதி இரவு நடந்ததாக கூறப்படும் இந்த விபத்தில், ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட பைக் வேகமாக வந்துள்ளது. எதிர்பாராத நேரத்தில் அது ஆக்சஸ் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. மோதலின் வேகத்தில் பெண் தனது வாகனத்துடன் சுமார் 10 அடி தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: கணவன் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. ஏலூர் அருகே சோகம்!

இதனால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அருகில் இருந்தவர்கள் உதவிக்கு வந்ததாகவும், விபத்து தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைக்கை விட்டுவிட்டு தப்பியோட்டம்

மோதலை ஏற்படுத்திய பைக் ஓட்டி, காயமடைந்த பெண்ணுக்கு உதவாமல் தனது வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சம்பவ இடத்தில் விடப்பட்ட பைக்கை அடிப்படையாகக் கொண்டு அதன் உரிமையாளர் மற்றும் தப்பியோடிய நபர் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். தப்பியோடிய பைக் ஓட்டியை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

இதையும் படிங்க: என்னா ஒரு ஸ்பிடூ... பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது திடீரென வந்த எமன்! தூக்கி வீசப்பட்ட கொடூரம்... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#குஜராத் விபத்து #bike accident #கார்பா வகுப்பு #CCTV Footage #புதுமண தம்பதி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story