×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'Old Monk' 'Royal Challenge ' 'Bagpiper' மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள்.. FSSAI தடை நடவடிக்கை.. குடிமகன்களே உஷார்..!

'Old Monk' 'Royal Challenge ' 'Bagpiper' மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள்.. FSSAI தடை நடவடிக்கை.. குடிமகன்களே உஷார்..!

Advertisement

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையமானது (FSSAI), ஓல்ட் மங்க், ராயல் சேலஞ்சர், பேக்பைப்பர், ஆண்டிக்விட்டி ப்ளூ உள்ளிட்ட சில பிரபல மதுபானங்களின் குறிப்பிட்ட வகைகள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் லேபிளிங் விதிமுறைகள் தொடர்பான குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

மேலும், விஸ்கி மற்றும் ரம் உள்ளிட்ட சில தயாரிப்புகளில், பழமையடைவதால் ஏற்படும் சுவை மற்றும் மணத்தை செயற்கையாக உருவாக்க ஃபிலேவர்கள் பயன்படுத்தப்பட்டதாக FSSAI தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை, தற்போதைய உணவு பாதுகாப்பு விதிகளுடன் பொருந்தவில்லை என்பதால் சம்பந்தப்பட்ட தயாரிப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நடவடிக்கை அந்த நிறுவனங்களின் அனைத்து தயாரிப்புகளுக்கும் பொருந்தாது. குறிப்பிட்ட சில உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்பட்ட சில வகைகள் மட்டுமே தற்போது இந்த உத்தரவின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன. அந்த பிராண்டுகளின் அனைத்து மதுபானங்களும் தடை செய்யப்பட்டுள்ளனவா என்றால் இல்லை.

இதையும் படிங்க: மது பிரியர்களுக்கு ஷாக் நியூஷ்! இந்த பிராண்டுகளுக்கு எல்லாம் திடீர் தடை...! உங்க பிராண்ட் இந்த லிஸ்ட்ல இருக்கா.... தெரிஞ்சுக்கோங்க! அதிரடி காட்டிய FSSAI...!!!

இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் விதிமுறைகளுக்கு உட்பட்டவையே என்றும், FSSAI-யின் முடிவை சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தின் முடிவு மீது மதுபானத் துறையின் கவனம் திரும்பியுள்ளது. இந்தச் சம்பவமானது, மதுபான உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்கள், லேபிளிங் நடைமுறைகள் மற்றும் தரக் கட்டுப்பாடுகள் மீது தற்போது பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மது பிரியர்களுக்கு ஷாக் நியூஷ்! இந்த பிராண்டுகளுக்கு எல்லாம் திடீர் தடை...! உங்க பிராண்ட் இந்த லிஸ்ட்ல இருக்கா.... தெரிஞ்சுக்கோங்க! அதிரடி காட்டிய FSSAI...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Fssai #Old Monk #Royal Challenge Liquor
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story