×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஷ்! இந்த பிராண்டுகளுக்கு எல்லாம் திடீர் தடை...! உங்க பிராண்ட் இந்த லிஸ்ட்ல இருக்கா.... தெரிஞ்சுக்கோங்க! அதிரடி காட்டிய FSSAI...!!!

செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஓல்ட் மங்க், ராயல் சேலஞ்ச் உள்ளிட்ட சில மதுபான தயாரிப்புகளின் விற்பனைக்கு FSSAI தடை விதித்துள்ளது.

Advertisement

இந்தியாவில் பிரபலமான சில மதுபான பிராண்டுகளின் குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு FSSAI தடை விதித்துள்ளது. ஆய்வில் விதிமுறைகளை மீறி செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட தயாரிப்புகள் எவை?

எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்ட உத்தரவின்படி, மத்திய பிரதேசத்தில் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் தயாரித்த ஆண்டிகுய்ட்டி ப்ளூ, ராயல் சேலஞ்ச் விஸ்கி மற்றும் இன்ப்ரூ பெவரேஜஸ் தயாரித்த பேக்பைப்பர் ராயல் விஸ்கி, ஓல்டு கேஸ்க் டிர்பிள் எக்ஸ் ரம் ஆகியவற்றின் குறிப்பிட்ட தயாரிப்புகளின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மகாராஷ்டிராவில் மோகன் ராக்கி ஸ்பிரிங் வாட்டர் நிறுவனம் தயாரித்த Old Monk பிராண்டின் மூன்று வகைகளும் தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இந்த உத்தரவு குறிப்பிட்ட உற்பத்தி ஆலைகளுக்கு மட்டுமா அல்லது நாடு முழுவதற்குமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் இன்னும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: பள்ளி வளாகத்திலேயே கொடூரம்.. 20 இடங்களில் சரமாரி குத்து.. துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.. பதறிய ஆசிரியர்கள், மாணவர்கள்.! 

ஆய்வில் கண்டறியப்பட்ட விதிமுறை மீறல்கள்

இந்திய உணவு பாதுகாப்பு விதிகளின்படி, மதுபானங்களில் இயற்கையான சுவையூட்டிகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி உள்ளது. ஆனால் ஆய்வில், விஸ்கிக்கு விஸ்கி சுவை, ரம்முக்கு ரம் சுவை என்ற வகையில் செயற்கை மற்றும் இயற்கை நிகர் (Nature-identical) சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. கரும்புச் சர்க்கரை, மால்ட், திராட்சை உள்ளிட்ட இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு பாரம்பரிய முறையில் தயாரிக்கும் செயல்முறைகளைத் தவிர்க்கும் நோக்கில் இத்தகைய முறைகள் பயன்படுத்தப்பட்டதாக எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்துள்ளது.

மதுபானத் துறையில் தாக்கம்

ஆண்டுக்கு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்திய மதுபானச் சந்தையில், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. தற்போது நடவடிக்கைக்கு உள்ளான பெரும்பாலான தயாரிப்புகள் நடுத்தர மற்றும் குறைந்த விலைப் பிரிவைச் சேர்ந்தவை என்பதால், இந்த உத்தரவு சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அதிக காஃபின் கொண்ட மதுபானங்களை 'எனர்ஜி டிரிங்க்' என்ற பெயரில் விளம்பரப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்த எஃப்எஸ்எஸ்ஏஐ, தற்போது மதுபான உற்பத்தித் தரத்திலும் தனது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்த திருடன் பொருளை எடுக்காமல்.. மனைவியிடம் அத்துமீறல்! கணவனின் எதிர்பாராத வேண்டுகோளை பார்த்து..... திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Fssai #Old Monk #ராயல் சேலஞ்ச் #Indian Liquor #மது பாதுகாப்பு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story