×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளி வளாகத்திலேயே கொடூரம்.. 20 இடங்களில் சரமாரி குத்து.. துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.. பதறிய ஆசிரியர்கள், மாணவர்கள்.! 

பள்ளி வளாகத்தில் ஆசிரியை கொடூர கொலை செய்யப்பட்டார். 

Advertisement

20 இடங்களில் பெண்ணை குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. 

ஆசிரியை: 

ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபத் மாவட்டம், பல்லப்கர் பகுதியில் வசித்து வருபவர் சந்தியா (வயது 29). இவர் தனது கணவருடன் வசித்து வந்தார். பெண்மணி சிகரோனா கிராமத்தில் செயல்பட்டு வரும் சரஸ்வதி செகண்டரி பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். 

இதையும் படிங்க: ஆசிரியயை வெளியே கூப்பிட்ட மர்ம நபர்! அடுத்த நொடி ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்...! பள்ளி வாசலிலேயே நடந்த கொடூரம்....!!!

மர்ம நபர்: 

இவர் நேற்று காலை நேரத்தில் வழக்கம்போல பள்ளிக்கு வந்த நிலையில், காலை 9 மணியளவில் பள்ளியில் இருந்தார். பள்ளி  திறக்கப்பட்டதும் முகத்தை மறைத்து வந்த மர்ம நபர், சந்தியாவை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சந்தியாவிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்த நிலையில், பள்ளியின் வாயிலுக்குச் சென்ற சந்தியா யார் என விசாரித்துள்ளார். 

கொலை: 

அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக இளைஞர் தான் எடுத்து வந்த கத்தியால் ஆசிரியையின் கழுத்து, வயிறு, மார்பு உட்பட 20 இடங்களில் சரமாரியாக குத்தினார். உதவி கேட்டு அலறிய சந்தியா தப்பிக்க முயற்சித்தும் பலனில்லை. தொடர்ந்து நடந்த தாக்குதலில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்துவிட, பள்ளி நிர்வாகிகள் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளியை பிடிக்க முயற்சித்தபோது அவர் கத்தி முனையில் மிரட்டி தப்பிச் சென்றார். 
 

உயிரிழப்பு & காரணம் என்ன?

மருத்துவமனையில் சந்தியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பெண் உயிரிழந்ததை உறுதி செய்தனர். மேலும், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் 21 வயதுடைய அமித் என்ற இளைஞரை கைது செய்தனர். தனியார் பள்ளியில் படித்து வந்த அமித் ஆசிரியையிடம் அவ்வப்போது பேசி வந்துள்ளார். ஆசிரியை சாதாரணமாக பேசி வந்த நிலையில், அமித் அதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல முற்பட்டுள்ளார். இதனை புரிந்துகொண்ட ஆசிரியை விலகி இருந்த நிலையில், பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த அமித் மீது ஆசிரியை பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார். இதனால் பழிவாங்கும் நோக்கத்துடன் கொலை செய்ததாக அமித் கூறி இருக்கிறார்.   

இதையும் படிங்க: பிறந்து வெறும் 5 நாள் பச்சிளம் குழந்தை! தண்ணீர் ட்ரம்முக்குள் மூழ்கடித்து துடிக்க துடிக்க கொன்ற 21 வயது தாய்.... காரணத்தைக் கேட்டா ஆடிப்போய்ருவீங்க.! பகீர் சம்பவம்....!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Delhi Teacher Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story