"இந்தப் பிள்ளைங்க எனக்கு பிறக்கல..." மனைவியின் மீது சந்தேகத்தால் விபரீதம்.!! 2 குழந்தைகள் அடித்து கொலை.!!
இந்தப் பிள்ளைங்க எனக்கு பிறக்கல... மனைவியின் மீது சந்தேகத்தால் விபரீதம்.!! 2 குழந்தைகள் அடித்து கொலை.!!
கர்நாடகாவில் யாதகிரி மாவட்டத்தில் தந்தையொருவர் தனது 2 குழந்தைகளை கோடாரியால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் தாய் மீதிருந்த சந்தேகமே இந்த கொடூர செயலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
கர்நாடகா யாதகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சரணப்பா. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஹேமந்த், பார்கவ் இரு மகன்களும் சான்வி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சரணப்பா தனது மனைவியின் நடத்தை மீது தொடர்ந்து சந்தேகப்பட்டு சித்திரவதை செய்து வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் குழந்தைகள் தனக்குப் பிறக்கவில்லை!! என்று கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
கணவனின் சந்தேக புத்தியை தாங்க முடியாத மனைவி ஒன்றரையாண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். தாய் வீட்டிற்கு சென்ற மனைவி மற்றும் குழந்தைகளை அவர் திரும்ப வருமாறு கூப்பிடவில்லை. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சமாதானம் பேசி மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வந்துள்ளார். என்னதான் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வந்தாலும் அவரது சந்தேக புத்தி ஒருபோதும் மாறவில்லை.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!
மீண்டும் தனது மனைவியிடம் இது தனக்கு பிறந்த குழந்தைகளை இல்லை என்று வாக்குவாதம் செய்துள்ளார். சம்பவம் நடந்த அன்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்க அவரது மனைவி வெளியே சென்றபோது, தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை கோடாரியை எடுத்து சாராமாரியாக வெட்டியுள்ளார். சத்தம் கேட்டு வந்த மனைவி பார்த்தபோது தான் பெற்ற 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தனர்.
இந்த கொடூரமான தாக்குதலில் சம்பவ இடத்திலேயே சான்வியும், பார்கவியும் இறந்தனர். ஹேமந்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியான சரணப்பாவை தேடி வருகின்றனர். சந்தேக புத்தியால் குழந்தைகளை கொடூரமாக கொன்ற இந்த தந்தையின் செயல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!