அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!
அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!
கர்நாடக மாநிலத்தில் மது போதையில் தகராறு செய்த கள்ளக்காதலி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண்ணின் காதலனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தின் சிக்கபள்ளாபூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபா ஜான்(40). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாபா ஜான், ரமிஜாபி என்ற திருமணமான பெண்ணுடன் கள்ள உறவில் இருந்து வந்தார். இவர்கள் இருவரும் உல்லாசமாக வாழ்ந்து வந்த நிலையில் 2 பேரின் குடும்பத்தாரும் இவர்களது உறவு குறித்து கண்டித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியேறிய ரமிஜாபி மற்றும் பாபா ஜான் ஆகியோர் தனியாக வாடகை வீடெடுத்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு காதலர்கள் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது அதிக மது போதையிலிருந்த ரமிஜாபி, தனக்கு அதிக மது வேண்டுமென கேட்டு பாபா ஜானை தொல்லை செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது கள்ளக்காதலியை அரிவாளால் கொடூரமாக வெட்டியிருக்கிறார். இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமிஜாபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் கள்ளக்காதலியை கொடூரமாக கொலை செய்த பாபா ஜானை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: போதையில் தந்தைக்கு அடி... தடுக்க வந்த அண்ணன் படுகொலை.!! குடிகார தம்பி கைது.!!