மனுஷனாடா நீ? சிகிச்சை என்ற பெயரில் செய்யும் சித்திரவதை..! பிஞ்சு குழந்தைகளின் உயிரோடு விளையாடும் போலி சாமியார்.! கதறி துடிக்கும் குழந்தைகள்! ஷாக் வீடியோ..!!,
பீகாரில் நோயைக் குணப்படுத்துவதாகக் கூறி பிஞ்சு குழந்தைகளை ஆபத்தான முறையில் வளைத்த போலி சாமியாரின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் நோயைக் குணப்படுத்துவதாகக் கூறி பிஞ்சு குழந்தைகளுக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் போலி சாமியாரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பரிஹார் பகுதியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தக் காட்சிகள் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
வீடியோவில், குழந்தைகளின் உடலை வலுக்கட்டாயமாக வளைத்து, கழுத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாமியார் செயல்படுவது தெரிகிறது. முறையான மருத்துவ சிகிச்சைக்கு பதிலாக இதுபோன்ற ஆபத்தான நடைமுறைகளை மேற்கொள்வது குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.
குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிகிச்சை
பிஞ்சு குழந்தைகளால் எதிர்க்கவோ, என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ளவோ முடியாத நிலையில், அவர்களை இவ்வாறு கையாள்வது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறான முறையில் உடலை வளைப்பதால் எலும்பு, தசை அல்லது கழுத்துப் பகுதியில் தீவிர காயங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பெற்றோரின் மூடநம்பிக்கையை பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். பீகார் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த வீடியோ தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வது அவசியம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விடுதி அறையில் 18 வயது கல்லூரி மாணவி உயிரிழப்பு! சாப்பாட்டில் விஷம் வச்சு கொன்னுட்டாங்க... தந்தையின் பரபரப்பு புகார்..!!!